35 C
Chennai
Thursday, May 23, 2024
karru
சரும பராமரிப்பு

சருமத்தில் பிரச்சனை வரும்னு பயமா?

அழகு என்பதை ஒருவரின் புறத் தோற்றத்தை வைத்தே நாம் மதிப்பிடுகிறோம்.அழகற்றவறாய் இருந்தால் அவரை நல்ல குணம் கொண்டவர்கள் இல்லை எனவும் சிலர் நினைப்பதுண்டு.

எனவே அழகு என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய விடயமாகி விட்டது. அந்த அழகை பாதுகாப்பதில் நாம், நமது சருமத்தில் பிரச்சனைகள் ஏதும் வராமல் முதலில் கவனிக்க வேண்டும்.

சருமத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்
பப்பாளிக் கூழ் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும் கலந்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறண்ட சருமம் பொலிவு பெறும்.

கொத்தமல்லித் தழையையும், புதினாவையும் சம அளவு எடுத்து அரைத்து, எலுமிச்சை கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் வழிகிற சருமம் அழகு பெறுவதுடன், மன அழுத்தமும் சரியாகும்.

பாலாடை அல்லது தயிருடன், தேன் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருவளையங்கள் மறையும்.

பாதாமும், ஓட்ஸும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவிக் கழுவினால், சருமம் பளபளப்பு பெறும்.

நெல்லிக்காயை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும்.

தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பருக்கள் வராமல் தவிர்க்கலாம்.

மஞ்சள் பூசி குளிப்பதனால் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல் இருப்பதுடன் என்றும் இளமையுடன் தோற்றமளிக்கலாம்.
karru

Related posts

கருப்பாக இருப்பவர்களுக்கு வீட்டில் செய்யக்கூடிய இயற்கை பியூட்டி டிப்ஸ்

nathan

இப்படித்தான் பயன்படுத்தணும்! மீசை முடி வளர்ச்சியை குறைக்க..

nathan

தோல் சுருக்கமா? இதோ டிப்ஸ்

nathan

தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும்

nathan

சரும சுருக்கத்தை போக்கும் காபி பவுடர் ஸ்க்ரப்

nathan

கழுத்து கருமை நிறம் மறைய

nathan

உலகமே பார்த்து பயப்படும் புற்றுநோயை அழிக்கும் சக்தியை கொண்ட இந்த பழம் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு…

nathan

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்……

sangika

பார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்

nathan