33.4 C
Chennai
Saturday, Jul 5, 2025
p341
அசைவ வகைகள்

திருநெல்வெலி மட்டன் குழம்பு:

தேவையானவை :
மட்டன் – அரை கிலோ
இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
வேகவைத்த உருளைக்கிழங்கு – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு.
அரைக்க :
தேங்காய் -அரை முடி (துருவிக் கொள்ளவும்)
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிக்க:
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் -2
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து , இஞ்சி – பூண்டு விழுது ,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறி மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும்.பின் வேகவைத்த மட்டன் சேர்த்து வதக்கி அரைத்த விழுது சேர்க்கவும்,பச்சை வாசனை போனதும் கொத்தமல்லித்தழைதூவி இறக்கிப்பரிமாறவும்.
p34

Related posts

செட்டிநாடு மீன் வறுவல்

nathan

முட்டை மசாலா பிரட் டோஸ்ட்

nathan

இறால் மசால்

nathan

செட்டிநாட்டு வஞ்சிர மீன் குழம்பு

nathan

சூப்பரான சைடு டிஷ் சில்லி முட்டை மசாலா

nathan

சுவையான இறால் குழம்பு செய்வது எப்படி?

nathan

சூப்பரான பசலைக்கீரை பக்கோடா

nathan

சுவையான காந்தாரி சிக்கன் குழம்பு

nathan

முட்டை கொத்து பரோட்டா (Muttai Kothu Parotta)

nathan