28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
meen curry 25 1456385741
அசைவ வகைகள்

கிராமத்து வறுத்தரைச்ச மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:
மீன் வஞ்சிரம் – 300 கிராம்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
வறுத்து அரைப்பதற்கு…
தேங்காய் – 1 கப் (துருவியது)
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 4
சின்ன வெங்காயம் – 5
பூண்டு – 5 பற்கள்
புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
1.முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளியைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்க வேண்டும்.
2.பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளிச்சாற்றினை சேர்த்து மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
3.பின்பு ஒரு வாணலியில் அந்த அரைத்த மசாலாவை போட்டு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததுட், மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை மீண்டும் கொதிக்க விட வேண்டும்.
4.பிறகு அதில் மீன் துண்டுகளை சேர்த்து மூடி வைத்து, மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.
5.அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு
5. பொன்னிறமாக வதக்கி, குழம்புடன் சேர்த்து இறக்கினால், வறுத்தரைச்ச மீன் குழம்பு ரெடி!!
meen curry 25 1456385741

Related posts

சத்து நிறைந்த மேத்தி ஆம்லெட்

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan

காரமான மசாலா மீன் வறுவல்

nathan

மீன் குழம்பு

nathan

இறால் உருளைக்கிழங்கு ஃபிரை

nathan

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan

அயிரை மீன் குழம்பு

nathan

சுவையான கருவாடு பிரட்டல்… நாள் செல்ல செல்ல அதிகரிக்கும் சுவை!

nathan

செட்டிநாட்டு ஆ‌ட்டு‌க்க‌றி குழம்பு

nathan