27.1 C
Chennai
Tuesday, Nov 19, 2024
bannanaflower
பெண்கள் மருத்துவம்

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் வாழைப்பூ

மாதவிலக்கு சமயத்தில் சிலருக்கு கடுமையான வலி இருக்கும். கருப்பையில் கிருமிகளின் தாக்கத்தால் வெள்ளை போக்கு ஏற்படுகிறது. கருப்பையில் ஏற்படும் நீர் கட்டிகள், நார் கட்டிகள் போன்றவற்றால் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலியை போக்க கழற்சிகாய் பயன்படுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீக்கத்தை கரைக்ககூடிய தன்மையை கொண்டது.

மாதவிலக்கு சமயத்தில் இடுப்பு வலி, வயிறு வலி, மார்பக வலி ஏற்படும்போது, கழற்சிகாயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து அரைத்து சாப்பிடுவதால் வலி குறையும். முறையற்ற மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை. முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும்.

இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாதவிலக்கிற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்து இதை குடித்துவர மாதவிலக்கு பிரச்னை தீரும்.மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வில்வ இலை ஒருபிடி எடுத்து பசையாக அரைத்து எடுக்கவும்.

இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஆறிய பின்னர் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து குடித்தால் அதிக உதிரப்போக்கு சரியாகும். காலை, மாலை என 3 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.மாதவிலக்கு சீராக இருப்பது அவசியம். அதிக உதிரப்போக்கால் உடல் பலவீனம் ஏற்படும். 3 நாட்கள் வரவேண்டிய மாதவிலக்கு அதிகநாட்கள் தொடரக்கூடாது. இப்பிரச்னைக்கு வில்வ இலை அற்புத மருந்தாகிறது. ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.

அருகம்புல் சாறு கால் டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் காலையில் குடித்துவர அதிக உதிரப்போக்கு சரியாகும். வாழைப் பூவை பயன்படுத்தி ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வாழைப் பூவை பொரியல் செய்வது போன்று சுத்தப்படுத்தி நீர் விடாமல் பசையாக அரைக்கவும். ஒரு ஸ்பூன் வாழைப்பூ பசையுடன் ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிர் சேர்க்கவும். இதை காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். வெள்ளைப்போக்கிற்கு இட்லி பூ மருந்தாகிறது. இதை தேனீராக்கி குடிப்பதால் வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.
bannanaflower

Related posts

பிள்ளைபேற்றை தள்ளிப்போடாதீர்கள்

nathan

டாம்பன் உபயோகிக்கலாமா?

nathan

தோல் வறட்சி நீங்க எலுமிச்சை!…

sangika

மாதவிடாய் காலத்தையே அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம்

nathan

கருச்சிதைவின் வெவ்வேறு விதங்கள்

sangika

பெண்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள்

nathan

தாய்ப்பாலின் மகத்துவம்

nathan

குழந்தை பிறந்த பிறகு பெண்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

nathan

வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan