தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி _ 2 1/2 டம்ளர்
வெங்காயம் _ ஒன்று
தக்காளி (அரிந்ததில்) _ நான்கு துண்டுகள்
எண்ணெய் _ 50 மிலி
நெய் _ 2 தேக்கரண்டி
பட்டை _ 3 இன்ச்சில் இரண்டு துண்டுகள்
ஏலக்காய் _ 2
கிராம்பு _ 3
மல்லி,புதினா தழை _ சிறிதளவு
தயிர் _ ஒரு தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு அரவை _ 2 தேக்கரண்டி
உப்பு _ தேவையான அளவு
*** செய்முறை ***
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.மல்லி,புதினா தழைகளை நன்கு நீரில் அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அரிசியை மூன்று முறை கழுவி விட்டு ஊறவைக்கவும்.
ஒரு அகலமான சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை,கிராம்பு,ஏலக்காய் இவைகளை போட்டு பின் நீளவாக்கில் அரிந்த வெங்காயம்,தக்காளி துண்டுகளை சேர்த்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் மல்லி புதினா தழைகளை சேர்த்து வதக்கி ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது நீரை வடிக்கட்டி அரிசியை சேர்க்கவும்.
தண்ணீர் சுண்டும் நிலையில் இருக்கும் போது மூடியில் ஃபாயிலோ,பேப்பரோ போட்டு மூடி அடுப்பில் தம் போடும் ப்ளேட் அல்லது இரும்பு தவாவை வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து மூடியின் மேல் வெய்ட்டான பாத்திரம் ஏதும் வைக்கவும்.அடுப்பை சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும்.
பிறகு மூடியை திறந்து ஒரு முரை கிளறி பார்த்தால் அடிவரை நன்கு சாதம் வெந்து உதிரியாக இருக்கும்.அடுப்பை அணைத்து விட்டு அப்படியே மூடி வைத்து விடவும்.
நன்றாக கமகமக்கும் நெய் சாதம்(தாளிச்சோறு) தயார்..
இதற்க்கு பெஸ்ட் காம்பினேஷன் சிக்கன்(அல்லது) மட்டன் குழம்பு இல்லையா.?அது அடுத்து வந்துட்டே இருக்கு…