ஆரோக்கியம்உடல் பயிற்சி

ஜிம்முக்குப் போகாமலே உடல் எடையை குறைக்கும் பயிற்சி

cd464872-6d2c-4e53-bef9-8adc7cfbb93b_S_secvpf.gifவீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். குண்டு உடல் இளைப்பதற்கு மிக எளிய உடற்பயிற்சிகள் உள்ளன.
தொப்பை குறைய வேண்டுமா?
கால்களை நெருக்கமாய் வைக்காமல் சற்றே இடைவெளி விட்டு நேராக நின்று கொண்டு மூச்சை உள்ளிழுத்த பிறகு, இரண்டு கைகளையும் உயரே தூக்கி, முதுகுப்புறமாய்ச் சற்றே வளைத்துப் பின் அவற்றை மெல்லக் கீழே கொண்டுவந்து இரண்டு கைகளாலும் இரண்டு கால்கட்டை விரல்களைத் தொடவும்.

 

இவ்வாறு குனியும்போது மூச்சை மெல்ல வெளியேற்ற வேண்டும். பின் பழைய நிலைக்கு மெல்ல இரு கைகளையும் உயர்த்தவும். இப்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு தொடக்கத்தில் பத்து முறை செய்யலாம்.

போகப்போக, எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்கையில், உடலை மிகவும் தளர்வாகவும் வைத்துக்கொள்ளக் கூடாது. அளவுக்கு மீறிய இறுக்கத்திலும் வைத்துக்கொள்ளக் கூடாது. நடுநிலையான இறுக்கத்துடன் உடல் இருக்க வேண்டும்.
இதேபோல் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, அதன் பின் குதிகால்களை உயர்த்திக்கொண்டு முன்னங்கால்களால் நின்று, மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
பிறகு குதிகால்களைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்தவாறே, மூச்சை வெளியேற்றி, கைகளை அவை இணையாக இருக்கும்படி முன்புறமாக நீட்ட வேண்டும்.
மீண்டும் பக்கவாட்டில் மூச்சிழுத்து நிறுத்திப் பின் முன் சொன்ன பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்த பயிற்சியின் எண்ணிக்கையையும் சிறுகச் சிறுக அதிகரித்துக்கொண்டே போகலாம். இது நுரையீரலை வலுவாக்கும்.

Related posts

காலணிகள் வாங்கும் போது கட்டாயம் இவற்றை கவனியுங்கள்

sangika

செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!!

sangika

வெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……

sangika

சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது!

sangika

ஓட்டம் எப்படி வெயிட்டைக் குறைக்கிறது தெரியுமா?

sangika

சலரோகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க!….

sangika

தண்ணீர் குடிக்கும் போது இதையும் கவனத்தில் கொள்கிறீர்களா?…

sangika

இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?/DOES DRINKING IS GOOD TO HEART?

nathan

சாதாரண வெயில் தானே என்று எப்போதுமே எண்ணி விடாதீர்கள்!…

sangika