31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
இனிப்பு வகைகள்

ப்ரெட் புட்டிங் : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள்

ப்ரெட் ஸ்லைஸ் – 10

பால் – 2 கப்

முட்டை – 2

கருப்பட்டி பொடித்தது – 1 கப்

வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்

ப்ரெட் மேல் தடவ…

வெண்ணெய் – 50 கிராம்

திராட்சை – 50 கிராம்

செய்முறை
முட்டையின் மஞ்சள் கருவுடன் கருப்பட்டி சேர்த்து, நுரைக்க அடித்துக் கொள்ளவும்.

அதில் சூடான பாலை சேர்க்கவும்.

ப்ரெட் துண்டின் ஓரத்தை வெட்டவும். புட்டிங் செய்யும் பாத்திரம் எந்த வடிவத்தில் இருக்கிறதோ அதற்கு ஏற்ற மாதிரி ப்ரெட்டை வெட்டிக் கொள்ளவும். புட்டிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, அதன் மேல் சிறிதளவு திராட்சை தூவவும்.

பின்னர் ப்ரெட் துண்டுகளின் இரு பக்கத்திலும் வெண்ணெயை தடவி, புட்டிங் பாத்திரத்தின் அடிப்பக்கங்கள் அனைத்திலும் நன்றாக வைத்து அமுக்கி கிண்ணம் மாதிரி வைத்துவிடவும்.

கடைசியில் முட்டை-பால் கலவையில் எசென்ஸ் சேர்த்து ப்ரெட் கிண்ணத்துக்குள் ஊற்றி மேலேயும் ப்ரெட் துண்டுகள் போட்டு மூடி சுமார் 180°Cக்கு பேக் செய்யவும் அல்லது இட்லி பானையில் ஆவியில் வேக வைக்கவும்.

புட்டிங் தயாரானதுன் ஒரு தட்டின் மேல் கவிழ்த்துக் கொட்டி துண்டுகளாக்கி பரிமாறவும்.

Related posts

கோன் சாக்லெட் ஃபில்லிங்

nathan

எக்லஸ் கேரட் புட்டிங்

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்

nathan

தீபாவளி ரெசிபி ஜாங்கிரி

nathan

கலர்ஃபுல் மில்க் அகர் அகர்

nathan

தேங்காய் பாயாசம்

nathan

பைனாப்பிள் – தினை கேசரி

nathan

சுவையான பாதாம் அல்வா

nathan

முட்டை வட்லாப்பம் : செய்முறைகளுடன்…!

nathan