தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்கறி/மட்டன் – 500 கிராம்
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 12 (நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு…
* கறிவேப்பிலை – சிறிது
* சோம்பு – 2 டேபிள் ஸ்பூன்
* கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 இன்ச் துண்டு
* பூண்டு – 3 பல்
* கிராம்பு – 2
* பட்டை – 1 இன்ச் துண்டு
* வரமிளகாய் – 3
* மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 3/4 கப் (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை குறைவான தீயில் 5-7 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மிளகாய் தூளை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி, தேவையான அளவு நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* நீங்கள் குக்கரில் சமைப்பதானால், அனைத்தையும் குக்கரில் போட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கொங்குநாடு ஆட்டுக்கறி குருமா தயார்.