36.4 C
Chennai
Tuesday, Jul 8, 2025
1453464694chicken milagu
அசைவ வகைகள்

சிக்கன் மிளகு கறி

தேவையான பொருள்கள்

சிக்கன் – அரைக் கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – 5 பல்
இஞ்சி – சிறிய துண்டு
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கி கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.

கறி நன்கு வதங்கியபின் 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும்.
நன்றாக கொதித்து குழம்பான பிறகு, மூடியைத் திறந்து நன்றாக கிளறி குழம்பு நன்கு கெட்டியானவுடன் இறக்கவும்.
1453464694chicken%20milagu

Related posts

சமையல் குறிப்பு- ஸ்பைசி நண்டு கிரேவி (செட்டிநாடு பாணியில்.)

nathan

ஆஃப்கானி சிக்கன் புலாவ்: ரம்ஜான் ரெசிபி

nathan

வறுத்தரைச்ச மட்டன் குழம்பு செய்வது எப்படி

nathan

வறுத்து அரைத்த மீன் கறி

nathan

சூப்பரான மாங்காய் சிக்கன் குழம்பு

nathan

சுவையான பெப்பர் சிக்கன் ட்ரை

nathan

சிக்கன் கிரீன் கிரேவி:

nathan

நண்டு ஃப்ரை

nathan

சோயா இறைச்சி பொரியல்

nathan