27.1 C
Chennai
Saturday, May 24, 2025
omlette gravy 1613557744
அழகு குறிப்புகள்

முதலியார் ஸ்டைல் ஆம்லெட் கிரேவி

தேவையான பொருட்கள்:

* முட்டை – 2

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

வெங்காய விழுதிற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2

* மல்லி – 1 டேபிள் பூன்

* மிளகு – 2 டேபிள் பூன்

* இஞ்சி – 1 இன்ச்

* பூண்டு – 4 பற்கள்

* கொத்தமல்லி – சிறிது

* புதினா இலைகள் – சிறிது

* தக்காளி – 1

தேங்காய் விழுதிற்கு…

* துருவிய தேங்காய் – 2 டேபிள் பூன்

* கசகசா – 1 டேபிள் பூன்

தயிருக்கு…

* தயிர் – 1/2 கப்

* மஞ்சள் தூள் – 1 டேபிள் பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் பூன்

* பட்டை – 1 துண்டு

* ஏலக்காய் – 1

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)

omlette gravy 1613557744

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட்டாக போட்டு, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு வெங்காய விழுதிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு தேங்காய் மற்றும் கசகசாவைப் போட்டு, நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்க வேண்டும். பின்பு அரைத்த தேங்காயை சேர்த்து 20 நிமிடம் வதக்கவும்.

* பிறகு அதில் தயிரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற்றி, சிறிது நீர் சேர்த்து நன்கு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

* இறுதியில் அதில் ஆம்லெட்டை துண்டுகளாக்கிப் போட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், முதலியார் ஸ்டைல் ஆம்லெட் கிரேவி தயார்.

Related posts

ஃபேஷியல்

nathan

ஃபேஸ் மாஸ்க்

nathan

முடி உதிர்தல், இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணி

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு

nathan

Beauty tips .. அழகுக்கு அழகு சேர்க்க!!!! இந்த ஒரு மாத்திரை போதும்….

nathan

இது மீண்டும் முடி வளர வேர்கால்களை உருவாக்கி தருகிறது!…

sangika

நகங்கள் உடைந்து போகிறதா…நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ்…

nathan

oily skin சருமத்தை பராமரிப்பதற்கான அழகு குறிப்புகள்…!

nathan

வெங்காயத்தால் சருமத்திற்கு கிடைக்கும் இயற்கை தீர்வுகள் என்ன?

sangika