எலும்பு பாதிப்பு :
ஓர் நாளுக்கு ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உறங்குவது எலும்புகளை வலுவாக பாதிக்கும்.
முக்கியமாக எலும்புகளில் இருக்கும் மினரல்ஸ் அளவு குறைந்துவிடும். இதனால் எலும்பு வலிகள் அதிகமாக வாய்ப்புகள் உண்டு.
இரத்த சர்க்கரை :
ஜன்க் புட்ஸ் மட்டுமின்றி, சரியான அளவு தூங்காமல் இருப்பதும் கூட உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீர்குலைக்கும்.
இதனால் மயக்கம், உடல் சோர்வு போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
புற்றுநோய் :
சரியான அளவு உறங்காமல் இருப்பது மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாக இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கமின்மை உடலில் நச்சுக்களை எதிர்த்து போராடும் திறனை குறைத்துவிடுகிறது.
நினைவாற்றல் :
சரியான அளவு தூங்காமல் இருப்பது மூளையை சோர்வடைய வைக்கிறது. உங்கள் மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் நல்ல தூக்கம் தேவை. தூக்கமின்மை காரணத்தால் நினைவாற்றல் குறைபாடு ஏற்படும்.
மாரடைப்பு :
நாம் உறங்கும் நேரத்தில் தான் நமது உடல் உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் சரியாக்கப்படுகின்றன மற்றும் நச்சுக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் தான் காலையில் எழுந்ததும் நீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இவற்றை நீங்கள் சரியாக செய்யவில்லை எனில், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
பதட்டம், மன சோர்வு :
தூக்கமின்மையால் ஏற்படும் மிகப்பெரிய குறைபாடு மன அழுத்தம் மற்றும் பதட்டம் தான். இது மெல்ல மெல்ல, மற்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட காரணமாக விளங்குகிறது.