28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ld4023
ஃபேஷன்

எளிமையே சிறப்பு!

இன்றைய இந்திய மணமகள் எழிலுடனும் ஸ்டைலுடனும் பாரம்பரியத்தை அரவணைத்துச் செல்கிறார். வண்ணம், வடிவமைப்பு, ஜுவல்லரி ஆகியவற்றைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. நவீனத்தையும் பாரம்பரியத்தையும் ஒருங்கிணைப்பதில் நிபுணரான பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர் அனுஸ்ரீ ரெட்டி மணப்பெண்ணின் திருமண உடைகளுக்கான ஷாப்பிங்கின் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

”ஃபேஷன் ஷோவில் கலந்து கொள்ளும் அலங்காரப் பதுமையைப் போன்றவரே மணப்பெண். அவர் எப்போது வருவார், ஆடை அணிகலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். அதோடு, அவரவர் தோற்றம் மற்றும் ஸ்டைலுக்கு ஏற்ற வகையில் திருமணத்துக்கு முன்பு நடைபெறும் சங்கீத், மெஹந்தி போன்ற நிகழ்ச்சி
களிலும் ஒளிர வேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆடைகள் கண்கவர் எழில் வண்ணங்களிலும், ஆபரணங்கள் எளிதில் அணியும் வகையிலும் இருந்தால், இந்தியக் கலாசாரம் மற்றும் சமகால ஸ்டைலுடனும் பின்னிப் பிணையும். வண்ணம், பூக்கள் ஆகியவற்றுடன் பிளாட்டினம் எளிதில் ஒருங்கிணைவதால், திருமண ஆடை அணிகலன்களுக்கு அவை மெருகேற்றும். கிளாஸியாகவும் இருக்கும்.

திருமணத்துக்கு முன் நடைபெறும் மெஹந்தி, சங்கீத் ஆகிய நிகழ்ச்சிகள் முழுக்க முழுக்க பாரம்பரியப் பெருமை மிக்கவை. இந்த அடிப்படையிலேயே ஆடைகளையும் ஆபரணங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். நீண்ட எம்ப்ராய்டரி ஜாக்கெட், க்ராக் டாப்ஸ் மற்றும் கீழ்வரை நீண்டிருக்கும் பாவாடைகள் சிறப்பானவை. கிளாசிக் ஜுவல்லரியிலும் கவனம் செலுத்தித் தேர்ந்தெடுக்க வேண்டும். இதோடு பாரம்பரியமும் நவீனமும் இணைந்த கலவையின் பிரதிபலிப்பாக பிளாட்டினம் விளங்கும்.

திருமணத்தின் போது அணியும் அனைத்து ஆடைகளிலும் (உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை) அழகுபடுத்திக் கொள்ளக் கூடாது. ஏதேனும் ஒன்றை மட்டும் – அதாவது, லெஹங்கா அல்லது துப்பட்டா அல்லது சோளியை மட்டும் அழகுபடுத்திக் கொள்ள வேண்டும். மற்றவற்றை சற்றுக் குறைவாக அழகுபடுத்திக் கொள்வது வசதியாகவும், பார்ப்பதற்கு எழிலாகவும் இருக்கும். இன்றைய பெரும்பாலான திருமண ஆடைகளின் ஸ்டைலில் இந்திய-மேற்கத்திய சாயலே உள்ளது” என்கிற அனு, எளிமையே சிறப்பு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார்.

ஸ்டைல்

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உள்ள கருதுகோளையும் வண்ணங்களையும் (Concept & Colors) பின்பற்ற வேண்டியது அவசியம். இருப்பினும், ஒவ்வொன்றும் எதை முக்கியமாக வெளிப்படுத்துகிறதோ, அதற்கேற்ற ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணியலாம். குறிப்பாக பவுடர் பிங்க் முதல் மிருதுவான லிலாக் மற்றும் ஃப்ளோரல்களால் ஆன லெஹங்கா கனவு தேவதையாக உங்களை மிளிர வைக்கும்.

ஜுவல்லரிகளைத் தேர்ந்தெடுக்கும் போது எந்த உலோகம் நீடித்து நிலைத்து நிற்குமோ அதை வாங்குங்கள். உங்கள் திருமணத்துக்கு இப்போது வாங்கும் பிளாட்டினம் நீடித்து நிலைக்கும். தட்பவெப்ப மாற்றம் எதுவும் பிளாட்டினத்தைப் பாதிக்காது என்பதால், ஜுவல்லரிக்கு ஏற்ற உலோகம் இது. வாழ்க்கையில் ஒரேயொரு முறை மட்டுமே நிகழும் மங்களகரமான நிகழ்ச்சி திருமணம். அதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆடைகளும் ஆபரணங்களும் உங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்… சரியானதை வாங்கி மகிழுங்கள்.

பிளாட்டின ஆபரணம் – விலை என்ன?

நெக்லஸ் / காதணி ஜோடி:

w 30 ஆயிரம் முதல் w 1 லட்சம் வரை.
வளையல் / பிரேஸ்லெட்: w 1 லட்சத்து 25 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை.ஆண்களுக்கான செயின் & பிரேஸ்லெட்: w 1 லட்சத்து 25 ஆயிரம் முதல் w 1 லட்சத்து 80 ஆயிரம் வரை.

(அன்றாட உலோக விலை, எடை ஆகியவற்றைப் பொருத்து விலை மாறுபடும்.)
ld4023

Related posts

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி

nathan

உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் தெரியுமா?இதை படியுங்கள்

nathan

மிதமான வெளிச்சம்… கண்ணுக்கு குளிர்ச்சி… வீட்டுக்கு அழகு திரை சீலைகள்

nathan

குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?

nathan

வசீகரிக்கும் வைரம்!

nathan

இளைஞர்கள் அணிய ஏற்ற புதிய சட்டைகள்

nathan

இதயம் வருடும் இனிய வைர நெக்லஸ்கள்

nathan

பெண்கள் நளினமாகப் புடவை கட்ட ஆலோசனைகள் !

nathan

பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்

nathan