ஃபேஷன்அலங்காரம்

முகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி

Nose-ring-increase-pretty-of-nமுகத்திற்கு அழகான வடிவத்தை தருவது மூக்குதான். மேக் அப் போடுவது கூடுதல் அழகை தரும். மூக்கு குத்திக்கொள்வது மூக்கு அழகையும், முக அழகையும்

அதிகரிக்கும். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் என்கின்றனர் முன்னோர்கள்.

இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக்கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

மூக்குக் குத்துவதால் பெண்கள் சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் பார்வைக் கோளாறுகள் நரம்பு சம்பந்தமான நோய்கள் மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். அகன்ற மூக்கு உள்ளவர்களுக்கு 5 கல் கொண்ட வட்ட மூக்குத்தி அழகை அதிகரித்துக் காட்டும்.

நீண்ட, சப்பை, குடமிளகாய் வடிவங்களில் உள்ள மூக்கினை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது என்றாலும் மூக்குத்தி போட்டு ஓரளவு அழகாக்கலாம். இவர்கள் சங்கு மூக்குத்தி, முத்து மூக்குத்தி போடுவதால் சப்பை மூக்கினை மாற்றிக்காட்டும்.
கூர்மையான நாசி கொண்டவர்கள் இடது மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி அணிவது முக அழகை அதிகரித்துக் காட்டும். கல் இல்லாத வெறும் மூக்குத்தி எந்த முகத்துக்கும் அழகாக பொருந்தும். சிவப்பாக உள்ளவர்களுக்கு பச்சைக்கல் மூக்குத்தி எடுப்பாக இருக்கும்.
மாநிறம் உள்ளவர்கள் சிவப்புக்கல் மூக்குத்தி, கருப்பு நிறமானவர்கள் வெள்ளைக்கல் மூக்குத்தி போட்டால் அம்சமாக இருக்கும். குறுகிய, நீண்ட முகம் உள்ளவர்களுக்கு ஒரு கல் மூக்குத்தி. அகல முகம் உள்ளவர்களுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்குத்தி பொருந்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button