குழந்தை பிறந்த பின்னர் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதோடு, சில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதில் ஒருசிலப் பிரச்சனைகளைப் பற்றி பல பெண்களுக்கு தெரியாது. ஏனெனில் அதனை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அது தான் மலச்சிக்கல். ஆம், மலச்சிக்கல் பிரச்சனை, பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றாகும். பொதுவாக பிரசவத்திற்கு பின் பெண்களின் செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும். இந்நேரத்தில் அவர்களால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுத்தால், கடுமையான வலியானது ஏற்படும்.
அதிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, இத்தகைய பிரச்சனை உடலில் இருந்தால், உடனே அதனை சரிசெய்ய முயல வேண்டும். இல்லாவிட்டால், அது குழந்தையின் உடலில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதற்கு முதலில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டியது சரியான டயட் தான்.
முறையான டயட்டை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மேற்கொள்ளாவிட்டால், அது உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமாக மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே பெண்கள் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் செரிமானமானது சீராக செயல்பட்டு, கழிகளானது எளிதில் வெளியேற்றப்படும். இப்போது பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும் உணவுகள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து உணவில் சேர்த்த மலச்சிக்கலில் இருந்து விடுபடுங்கள்.