26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
ld118
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

மொழு மொழு பாதங்களுக்கு

சிலருக்கு கால்களில் வெடிப்புகள் மற்றும் ஒருவிதமான சொற சொறப்புகள் இருக்கும்..
பட்டு போன்ற பாதங்கள் இல்லையே என்ற ஏக்கமிருக்கும்.. அதனை சரிசெய்ய இதோ சில டிப்ஸ்கள்….

பாத வெடிப்புக்கு:
வெதுவதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு போட்டு 10 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு மென்மையாக ஸ்கிரப்பர் வைத்து தேய்க்கவும்.. தொடர்ந்து இப்படி செய்வதால் தோல்கள் உதிர்ந்து ஸ்மூத்தாகும். பிறகு பாதங்களை துடைத்துவிட்டு கால் பாதங்களுக்கு தடவும் கீரிமை போடவும்.

கால்கள் சாஃப்டாக:
தர்பூசிணி பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை கால்களுக்கு தேய்க்கலாம்.
பால்பவுடர் சிறிது, ஓட்ஸ் தூள் கலந்து தேய்க்கலாம்.
ஒரு கரண்டி தயிரில் ஒரு ஸ்பூன் சீனி கலந்து கால் பாதங்களில் தேய்த்து 10 நிமிடம் கழித்து அலசவும்..
சிலருக்கு வெயிலினால் கால்கள் வறண்டு போய் சொற சொறப்பாக இருக்கும். அவங்க நல்ல பழுத்த ஆப்பிளை தோலுடன் அரைத்து கை, கால்களில் பூசிக்கொள்ளலாம்.

கால், கை முட்டியின் கருப்பு நிறங்களை போக்க:
தினமும் இரவு படுக்கும் முன்பு கை, கால் முட்டிகளில் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் தடவி மசாஜ் செய்துவிட்டு படுங்க. சில நாட்களில் சரியாகிவிடும்.

அரிசிமாவு பொடி, சீனி, எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப் செய்யவும்.அலசிய பிறகு புதினா சாறு, தேன், தயிர் கலந்து தடவி 10நிமிடம் கழித்து அலசிவிடவும்.
பப்பாளிப்பழ துண்டுகள், சிறிது சீனி சேர்த்து கை, கால் முட்டிகளில் தேய்க்கவும்.

மென்மையான செப்பல் போடுங்க:
வீட்டில் இருக்கும் பொழுது கட்டாயம் ஸாஃப்டான செருப்பு போட்டு நடக்கவும்.
வெளியில் செல்லவும் ஸாஃப்ட் செருப்பை பயன் படுத்தவும். அழகாக இருக்கு என்று உங்கள் காலுக்கு ஒற்றுக்கொள்ளாத செருப்பை போடாதீங்க.
ஹை ஹீல்ஸை தவிர்க்கவும். இதனால் பேக் பெயின் மற்றும் பாதங்களில் வலி ஏற்படும்.
செருப்புகள் கடினமாக இருந்தால் கால்களிலும் பாதங்களிலும் வலி அதிகமாக இருக்கும்.

ld118

Related posts

சூப்பரான கை வைத்தியம்!

nathan

தொடைகளில் உருவாகும் செல்லுலைட்டை போக்க வீட்டிலேயே அருமையான சிகிச்சை!!

nathan

இதோ எளிய நிவாரணம்! விரல் நுனிகளில் தோல் உரிவதைத் தடுக்க சில வழிகள்!!!

nathan

டேஸ்டியான க்ரீன் மீன் கறி செய்வது எப்படி?

nathan

உங்களது சருமம் ஜொலிக்க வேண்டுமெனில்!..இதோ சில வழிகள்!

sangika

90ஸ் கனவுக்கன்னி நடிகை ஹீரா.. தற்போது எப்படி இருக்கிறார்

nathan

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா கெட்டதா?

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ்

nathan

வயதாவதை தடுக்கும் பேக் ,tamil beauty tips

nathan