பனாரஸி புடவைகள் என்பது வாரணசியில் உருவானது. வாரணாசிற்கு மற்றொரு பெயர் பனாரஸ் என்பதாகும். பனாரஸி புடவைகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட விலையுயர்ந்த வேலைப்பாடு நிறைந்த சேலைகளில் ஒன்று. இதில் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும்.
பட்டு நூலால் நெய்யப்படும் பனாரஸ் சேலைகளில் பல்வேறு கலைநயம் மற்றும் வளைவு வேலைப்பாடு அழகுற நெய்யப்பட்டிருக்கும். இந்தியாவில் திருமண கோலத்தில் மங்கையர் விரும்பி அணியும் புடவைகளாக பனாரஸ் சேலைகள் உள்ளன. இதன் காரணமாக இதில் கலைநய வேலைப்பாட்டுடன் சேலை நெய்தல் என்பது 15 நாள் முதல் ஒரு மாதம் வரை நீட்டிக்கும். சில புடவைகள் நெய்ய ஆறுமாதம் வரை பிடிக்கும். பனாரஸி புடவைகள் நான்கு முக்கிய வகைகள் உள்ளன.
அதாவது சுத்தமான பட்டு(காட்டன்), ஆர்கன்சா(தோரா), ஜார்ஜெட் மற்றும் ஷாட்மூர் என்றவாறு உள்ளது. வடிவமைப்பு அடிப்படையில் எனும் போது ஜன்கலா, தான்சோய், வஸ்கட், கட்வொர்க், டிஷ்யூ மற்றும் புத்திதார் என்றவாறு உள்ளது. அத்துடன் ஜாம்தானி மிக முக்கியமானது. ஜாம்தானி பனாரஸ் சேலைகள் என்பது தனிப்பட்ட தொழில்நுட்ப பிரிவாகும். அதாவது இப்புடவைகள் மஸ்ஸின், பட்டுத்துணி என்பதில் நெய்யப்படுவதுடன் பிராகோட் காட்டனில் செய்யப்பட்டுள்ளது.
ஜன்கலா புடவைகள் என்பது வண்ணமயமான பட்டு நூலால் அதிக பளபளப்புடன் நெய்யப்படுகிறது. மேலும இதில் விரிவான மற்றும் சுழன்ற ஒரே டிசைன் கண்ணை கவரும். தான்சோய் என்பது மேற்புற பலவித வண்ணங்கள் வரும் படியான மேற்புற நூலினால் நெய்யப்பட்டட புடவை. இது ஜரிகை மற்றும் பட்டு இணைத்து உருவான சேலை.
பெண்கள் பலரும் விரும்பும் புடவை வகைகளில் பனாரஸ் புடவையும் ஒன்று. இதில் திருமண மணப்பெண் சேலை முதல் பல விழாக்களுக்கும் அணிய ஏற்ற வகை டிசைன் சேலைகள் உள்ளன. தற்போது பனாரஸ் புடவைகளில் இளம்வயதினரும் விரும்பும் லென்ஹா பனாரஸ் புடவைகள், நெட் சேலைகள், ஜாக்குவார் புடவைகள், டைமண்டோ புடவைகள் போன்றவையுடன் பாரம்பரிய பனாரஸ் புடவைகளும் கிடைக்கின்றன.