அலங்காரம்ஃபேஷன்மணப்பெண் அழகு குறிப்புகள்

இவ்வாறான ஆண்மகனை தேர்ந்தெடுங்கள் உங்கள் துணையாக!…

வேதங்கள்

பண்டைய கால மகாசக்தி வாய்ந்த முனிவர்கள் மண்மகனுக்கான சிறந்த தகுதிகள் என்னென்ன என்பதை வகுதார்கள். பின்னர் அது வேதங்களாகவும், சாஸ்திரங்களாகவும் தொகுக்கப்பட்டது. அதன்படி அவர்கள் சில முக்கியமான குணங்களையும், தகுதிகளையும் கண்டறிந்து அந்த குணங்கள் இருக்கும் ஆண்கள் சிறந்த குடும்ப தலைவராகவும், கணவராகவும் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.

முதல் தகுதி

சிறந்த ஆண்மகனுக்கு தைரியமும், சகிப்புத்தன்மையும் மிகவும் முக்கியமான குணங்களாகும். ஆண்மகன் எந்த காரியமாக இருந்தாலும் அது சிறிய காரியமோ அல்லது பெரிய காரியமோ அதனை சிங்கம் செயல்படுவதை போல செயல்பட்டு முடிக்க வேண்டும்.

6 large 2

இரண்டாவது தகுதி

மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன் இருக்க வேண்டும். தனக்கு வாழ்வில் எது முக்கியமென நினைக்கிறார்களோ அவை அனைத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அனைத்தையும் திட்டமிட்டு செய்ய வேண்டுமென்று அவசியமில்லை, ஆனால் எதையும் கோட்டை விடுபவராக இருக்கக்கூடாது.

மூன்றாவது தகுதி

அதிகாலையில் எழும் பழக்கமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். தான் எழுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சுயகட்டுப்பாட்டையும் உணர்த்தும்.

நான்காவது தகுதி

கடினமான உழைப்பை தாங்குவதற்கு துணிவு இருக்க வேண்டும், உழைக்க ஒருபோதும் தயங்கவோ அல்லது அச்சம் கொள்ளவோ கூடாது. அப்படி இருப்பின் அவர்கள் எதிர்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

ஐந்தாவது தகுதி

அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பும், தாராள மனப்பான்மையும் இருக்க வேண்டும். தன் உணவு, உடைகள், பொருட்கள் அனைத்தையும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும். வேலைகளை பகிர்ந்து செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆறாவது தகுதி

ஆணின் காதும். இதயமும் நன்றாக இருக்க வேண்டும். மனைவியின் ஆசைகளையும், தேவைகளையும் காதல் கேட்கும் கணவன் இதயம் முழுவதும் நிறைந்த அன்பினால் அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஏழாவது தகுதி

தனது உறவுகள், தொழில்முறை வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையில் ஆபத்தை ஏற்படுத்துவது எதுவென நன்கு உணர்ந்திருக்க வேண்டும். தங்கள் பிரியமானவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை முன்கூட்டியே உணரும் எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும்.

எட்டாவது தகுதி

பெரும்பாலான ஆண்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், ஆண்மைத்திறனை பற்றியும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதை பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்றாகும். எவனொருவன் தன் தனிப்பட்ட வாழ்க்கையை மதித்து அதைப்பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறானோ அவன் உண்மையில் சிறந்த ஆண்தான்.

ஒன்பதாவது தகுதி

வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையிலும் வியாபாரத்தில் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கைவிடாதவராக இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் தளர்ச்சியே அவர்களின் தோல்விக்கு காரணமாக மாறிவிடும்.

பத்தாவது தகுதி

தேவையற்ற பொருட்களையும், மனிதர்களையும் வாழ்க்கையில் சேமிப்பதில் நம்பிக்கை இல்லாமல், தனக்கு தேவைப்படும் மனிதர்களையும், நினைவுகளையும் மட்டும் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவர்களே திருமண வாழக்கைக்கு ஏற்றவர்கள்.

பதினொன்றாவது தகுதி

பணிவு என்பது அடிப்படையான நல்ல குணங்களில் ஒன்று. பணிவு இல்லையெனில் அது ஒருவரது செல்வம், அறிவு, பெருமை, இலட்சியம் என அனைத்தையும் அழித்துவிடும்.

பன்னிரெண்டாவது தகுதி

தன்னிடம் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைய கூடியவராகவும், மேற்கொண்டு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவராகவும் இருக்க வேண்டும். அதேசமயம் தன்னிடம் இது இல்லையே, அது இல்லையே என்று நினைத்து வருத்தப்படுபவராக இருக்கக்கூடாது.

பதிமூன்றாவது தகுதி

சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுபவராகவும், ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும். தான் ஆரோக்கியம் மட்டுமில்லாது தன்னை சுற்றியிருப்பவர்களின் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை செலுத்துபவராக இருக்க வேண்டும்.

பதினான்காவது தகுதி

கடினமான சூழ்நிலைகளில் தங்கள் பொறுமையை இழக்காதவர்களாக இருக்க வேண்டும். அதேசமயம் அந்த கடினமான சூழ்நிலையில் இருந்து உடனடியாக வெளிவரும் புத்திகூர்மை உள்ளவராக இருக்க வேண்டும். தன் குடும்பத்தினர் மீது ஒருபோதும் வன்முறையை பயன்படுத்தக்கூடாது.

பதினைந்தாவது தகுதி

பெண்கள் விஷயத்தில் ஒழுக்கம் என்பது திருமண வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். பெண்களை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படுத்த கூடாது. குறிப்பாக தங்கள் துணையின் மீது நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button