28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
11 1436606039 5 cucumber
இளமையாக இருக்க

இளமையை பாதுகாக்க வார இறுதியில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

இன்றைய மாசடைந்த காலக்கட்டத்தில் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. இதற்கு சுற்றுசூழல் மட்டுமின்றி உண்ணும் உணவுகளும் தான் காரணம். இத்தகைய நிலையை தவிர்க்க, வாரந்தோறும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் வாரந்தோறும் மட்டுமின்றி தினமும் மேற்கொள்வது இன்னும் நல்லது.

அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வார இறுதியில் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்களின் இளமைத் தோற்றத்தைப் பாதுகாக்கலாம். சரி, இப்போது இளமையை பாதுகாக்க வார இறுதியில் தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகளைப் பார்ப்போமா!!!

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மிகவும் வலிமை வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள். இது முதுமை புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை போக்கும் திறன் கொண்டவை. எனவே எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து, தினமும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இன்னும் மிகச்சிறந்த பலனைப் பெறுவதற்கு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை, 1/2 டீஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் 1 டீஸ்பூன் முட்டையின் வெள்ளைக்கருவோடு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்யலாம் அல்லது வார இறுதிநாட்களில் கூட செய்து வரலாம். முக்கியமாக எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்திய பின் ஏதேனும் எண்ணெயை சருமத்தில் தடவிக் கொள்ள வேண்டும்.

தேங்காய் பால்

தேங்காய் பாலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, சருமத்தை வறட்சியின்றி மென்மையாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு தேங்காய் பாலை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பப்பாளி

பப்பாளி சருமத்திற்கும், கண்களுக்கும் நல்லது. இதற்கு அதில் உள்ள வைட்டமின் ஏ மட்டுமின்றி, அதில் இருக்கும் பாப்கைன் என்னும் நொதி சருமத்தின் மேல் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வெளிக்காட்டுகிறது. அதற்கு நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றுவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, முகப்பொலிவையும் அதிகரிக்கும். அதற்கு 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன், 3-4 துளிகள் கிளிசரின் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன், காட்டன் கொண்டு முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். இதனாலும் இளமையைப் பாதுகாக்கலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் தயிர் பேக்

வெள்ளரிக்காயில் உள்ள குளிர்ச்சி தன்மையினால், அதனை கண்களின் மேல் வைத்தால், கருவளையங்கள் நீங்குவதோடு, கண் வீக்கத்தையும் குறைக்கும். அதேப்போல் தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி, முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும். அதிலும் வெள்ளரிக்காய் மற்றும் தயிரை ஒன்று சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போட்டால், இதன் பலன் இரட்டிப்பாகும். அதற்கு 1/2 கப் தயிரில், 2 டீஸ்பூன் துருவிய வெள்ளரிக்காய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் இருக்கும்.

11 1436606039 5 cucumber

Related posts

இளமையைத் தக்க வைக்க கண்டதை செய்யாம, இந்த ஜூஸ்களை மட்டும் குடிங்க….

nathan

40 வயதினிலே… பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை!

nathan

முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்

nathan

அழகான பின்புறம் அமைய ஆலோசனைகள்!

nathan

வயதானாலும் அழகும் இளமையும் மாறாமல் இருக்க என்ன செய்யனும்?

nathan

நீங்கள் படுக்கும் முறையும் வயதான தோற்றத்திற்கு காரணமாகிவிடும் என்பது தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இளமையைத் தரும் ஆலிவ் ஆயில்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் திருமணத்தன்று தொப்பையை மறைக்கணுமா?

nathan

தினந்தோறும் காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்பவர்கள் கட்டாயம் இத படிங்க!…

sangika