28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
முகப்பருவில் இருந்து இரத்தம் வருவதைத் தடுக்க சில வழிகள்!!!
முகப்பரு

முகப்பருவில் இருந்து இரத்தம் வருவதைத் தடுக்க சில வழிகள்!!!

ஒவ்வொருவரும் கட்டாயம் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. அதிகூம் இந்த பருக்கள் முகத்தில் வந்தால், அது அழகை கெடுப்பதோடு, முகத்தை பொலிவிழக்கச் செய்து வெளிப்படுத்தும். சில நேரங்களில் பருக்கள் கடுமையான வலியையும் உண்டாக்கும்.

சிலருக்கு பருக்கள் அரிப்புக்களையும், இரத்தக்கசிவையும் ஏற்படுத்தி, எரிச்சலைத் தரும். பருக்களில் இருந்து இரத்தக்கசிவு ஏற்பட்டால், அதற்கு காரணம் சருமத்துளைகளில் கடுமையாக நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். ஆகவே அந்நேரத்தில் கைகளால் பருக்களை தொடுவதை முதலில் நிறுத்துங்கள்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்து வாருங்கள். இதனால் பருக்களில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவதைத் தடுக்கலாம். குறிப்பாக இந்த செயல்கள் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பொருந்தும்.

முகத்தை பலமுறை கழுவுங்கள

் தினமும் முகத்தை பலமுறை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக அப்படி கழுவும் போது, எந்த ஒரு கெமிக்கல் கலந்த பொருட்களான சோப்பு, கிளின்சர், ஃபேஸ் வாஷ் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை பருக்களின் நிலையை மோசமாக்கிவிடும்.

சரிவிகித உணவு

உண்ணும் உணவிற்கும், பருக்களில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதற்கும் தொடர்புள்ளது. ஆகவே சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை தவறமல் உட்கொண்டு வாருங்கள். அதிலும் வைட்டமின் ஏ, நியாசின், வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாடம் எடுத்து வருவது நல்ல பலனைத் தரும்.

தொட வேண்டாம்

பருக்களில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்க சிறந்த வழி, அவற்றை தொடாமல் இருப்பது தான். ஏனெனில் கைகளால் பருக்களைத் தொடும் போது, கைகளில் உள்ள பாக்டீரியாக்கள் பருக்களில் நுழைந்து, நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

வைட்டமின் பி மாத்திரைகள்

வைட்டமின் பி மாத்திரைகளை எடுப்பதன் மூலமும் பருக்களில் இரத்தக்கசிவு ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் வைட்டமின் பி மாத்திரைகள் பருக்களை விரைவில் போக்கவும் செய்யும்.

ஐஸ் கட்டிகள

் பருக்களில் இரத்தக்கசிவு அதிகம் இருந்தால், ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தனம் கொடுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைப்பதோடு, இரத்தக்கசிவு ஏற்படுவதும் உடனே நின்றுவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் விரைவில் பருக்களை குணமாக்கும். அதிலும் இது சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, வேறு சில சரும பிரச்சனைகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

டூத் பேஸ்ட்

ஐஸ் கட்டிகளைக் கொண்டு பருக்களை மசாஜ் செய்த உடனேயே, டூத் பேஸ்ட்டுகளை பருக்களின் மீது வைத்தால், அது நல்ல நிவாரணத்தை வழங்கும். அதிலும் வெள்ளை நிற டூத் பேஸ்ட்டைத் தான் பயன்படுத்த வேண்டும். ஜெல் உள்ள டூத் பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது.
08 1433745881 1 washingface

Related posts

முகப்பருவை போக்க தகுந்த சிகிச்சை தேவை

nathan

சீழ் நிறைந்த பருக்களைப் போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!

nathan

முக பருக்கள் மற்றும் முடி பிரச்சினையை சரி செய்ய வழியே இல்லையா? அப்போ கட்டாயம் இத படிங்க!…

sangika

பருக்களை தடுத்து சருமத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

nathan

முகப்பருக்கள் வருவதை தடுக்கவும் , குனபடுதவும் சில எளிய ஆயுர்வேத வழிகள்.!

nathan

முகப்பருவுக்கு காரணங்கள்

nathan

பளிங்கு முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன?

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

பருக்கள், தழும்புகளை போக்கும் ஹெர்பல் பேக்

nathan