27.6 C
Chennai
Tuesday, Jul 22, 2025
24 drumstick leaves 1 600
மருத்துவ குறிப்பு

முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பொதுவாக உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். இத்தகைய இரத்த சோகையானது ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. இரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து, சருமம், சுவாசப் பாதை, செரிமான மண்டலம் போன்றவற்றில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இரத்த சோகை இருந்தால் மாதவிடாய் சுழற்சியானது சீராக நடைபெறாமல் போகும்.

குறிப்பாக பெண்கள் இந்நிலையில் கருத்தரித்தால், வயிற்றில் வளரும் குழந்தையானது ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பிறக்கும். ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு குறைவாக இருந்தால், அதனை இயற்கை முறையில் அதிகரிக்க முருங்கைக்கீரையை சாப்பிடுங்கள். இதில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து மட்டுமின்றி, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்றவையும் உள்ளது.
சரி, இப்போது முருங்கைக்கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போமா!!!

தெளிவான பார்வை
முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை கிடைக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

இதயத்திற்கு நல்லது
முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அவர்களை எளிதில் தாக்கும் மாரடைப்பு மற்றும் இதர இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும்.

புற்றுநோய்
முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

எலும்பு மற்றும் பற்களுக்கு சிறந்தது
முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலுவினை அதிகரிக்கும்.

இரத்த சோகை
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகிறது.

வெப்பத்தை தணிக்கும்
முருங்கைக்கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் வெப்பமானது குறையும்.

தாய்ப்பால் சுரப்பு
பிரசவம் முடிந்த பெண்கள் தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க, முருங்கைக்கீரையை சாப்பிடுவது நல்லது.

பிரசவத்திற்கு பின் சிறந்தது
பெண்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் அதிகம் வெளியேறும். ஆகவே பிரசவத்திற்கு பின் அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவானது அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும்.

ஞாபக திறன் அதிகரிக்கும்
குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர வைத்து, பொடி செய்து, பின் அந்த பொடியை பாலில் சேர்த்து கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். இதனால் கண்கள் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும்.

ஆண்களுக்கு நல்லது
முருங்கைக்கீரையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்மை அதிகரிப்பதுடன், விந்தணுவானது கெட்டிப்படும்.

சிறுநீரக செயல்பாடு
வாரம் இரண்டு முறை முருங்கைக்கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக மண்டலம் சீராக செயல்பட்டு, சிறுநீர் அதிகமாக வெளியேறி, உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.
24 drumstick leaves 1 600

Related posts

மார்பகத்தின் அளவிற்கும் தாய்பால் சுரப்பிற்கும் தொடர்பு உண்டா?

nathan

எதனால் ஏற்படுகிறது?..!! சினைப்பை புற்றுநோய்க்கான அறிகுறி என்ன?..

nathan

பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன?

nathan

மன அழுத்தத்தின் மூலம் உடல் எடை எப்படி அதிகரிக்கிறது?

nathan

பெண்களின் இந்த 6 முக்கிய அம்சங்கள் தான் ஆண்களைக் கவருகிறது என்று தெரியுமா?

nathan

சளி இருமலை போக்கும் தூதுவளை!

nathan

எச்சரிக்கை! தும்மல் போட்டாலே கருப்பை இறங்குமா?

nathan

உங்க உடல் எடையை குறைக்க உணவு உட்கொள்ளலை நிர்வகிப்பது எப்படி ?

nathan

மெனோபாஸ் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

nathan