29.5 C
Chennai
Saturday, May 24, 2025
அழகு குறிப்புகள்

இளம்பெண் மீது இளைஞர் பரபரப்பு புகார்!

ராஜஸ்தான் மாநிலம் சிகார் சதார் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் நாளடைவில் நட்பாக பேசி பழகி வந்துள்ளார்.

தொடர்ந்து இருவரும் காதல் ரசம் சொட்ட இனிக்க இனிக்க இளைஞரிடம் பேசி வந்துள்ளார். ஒருநாள் இருவரும் சந்திந்துக்கொள்ள முடிவு செய்து முதன்முறையாக கதுஷ்யாம்ஜியில் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில் சுபாஷின் முழு நம்பிக்கைக்கு உரியவராக அந்தப் பெண் மாறிவிட்டார். சில நாள்களில் சுபாஷ் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணும் இது தொடர்பாக என் தந்தையிடம் பேசுங்கள் எனக் கூறி ஒரு நபரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மூவரும் சந்தித்து பேசி திருமணத்துக்கும் சம்மதித்திருக்கின்றனர். இதற்கிடையில், அந்தப் பெண் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும். அதனால் தன்னுடன் தங்கியிருக்கிமாறு ஒரு ஹோட்டலுக்கு சுபாஷை ஆசை வார்த்தை கூறி அழைத்திருக்கிறார்.

சரி மனைவியாக வரப்போகிறவள் தானே என நம்பி சென்றார் சுபாஷ். அப்போது ஹோட்டலில் இருவரும் ஒன்றாக தங்கியிருந்தபோது சுபாஷை நிர்வாணமாக புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்திருக்கிறார். அதன் பிறகு சில நாள்களில் சுபாஷிடம் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்திருக்கிறார். சுபாஷ் போன் செய்தும் அவர் செல்போனை துண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தையாக அறிமுகமான அந்த நபரிடம் இது குறித்து அழைத்து விசாரித்திருக்கிறார் சுபாஷ். அந்த நபர் “என் மகள் திருமணத்துக்கு மறுத்துவிட்டாள்.

அதனால் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார். சுபாஷும் அதற்குப் பிறகு அந்தப் பெண்ணுடன் பேசுவதை செல்போனில் தொடர்புகொள்வதை நிறுத்தி விட்டார். அதனை தொடர்ந்து தான் அவருக்கு சிக்கல் ஆரம்பித்தது.

இந்த நிலையில், திடீரென சுபாஷின் ஆபாச படங்கள் வீடியோக்கள் அவருக்கு அனுப்பி, `ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லையென்றால் இந்தப் புகைப்படங்களை உனது குடும்பத்தினர், நண்பர் என அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் எனத் மிரட்டி உள்ளார்.

மேலும், தன்னுடன் ஒரு பெரிய குழு இயங்குவதால் உன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ந்த சுபாஷ் தனக்கு நடந்தது நாடகம் என புரிந்து கொண்டார்.

உடனே, சிகார் சதார் காவல் நிலையப் பகுதியில் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை இது தொடர்பாக விசாரணையை நடத்தி வருகின்றனர். தெரியாத நம்பரில் இருந்து வரும் போன்கால்களை எடுக்க வேண்டாம் என சுபாஷிடம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.-News & image Credit: dailythanthi

Related posts

தொப்பையை இலகுவாக குறைக்க வீட்டில் உள்ள இரண்டு பொருட்கள்!

sangika

கரையானது பற்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த கூடியது…..

sangika

அடேங்கப்பா! 43 வயதிலும் கட்டழகு குறையாமல் இருக்கும் கமல்ஹாசனின் வருங்கால மனைவி !

nathan

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா

nathan

சுக்கிரன் பெயர்ச்சி:இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், வாழ்க்கை ஜொலிக்கும்

nathan

கண்களை பாதுகாக்க‍ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்!….

sangika

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

nathan

37 வயதில் க்ளாமருக்கு குறை வைக்காத நடிகை பிரியாமணி..

nathan