28.1 C
Chennai
Saturday, Jul 11, 2026
மருத்துவ குறிப்பு

45 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்

பொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆகவே இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். 45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது.

ஆகவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த மாட்டிறைச்சி, கானாங்கெளுத்தி மற்றும் முட்டைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

மன அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம் பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகைப்பிடித்தல் போன்றவை இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகிறது. இறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் இரத்தசோகைக்கு உள்ளாவார்கள்.

எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 45 வயதைக் கடக்கும் போது பெண்கள், வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

Related posts

சர்க்கரை அளவை குறைக்கும் கோவைக்காய்

nathan

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்கும் கருஞ்சீரகம்

nathan

ஒமிக்ரானின் தீவிரம் பயன்படுத்தும் துணி மாஸ்க் பாதுகாப்பானதா?

nathan

கசக்கும் இல்லறம் – இனிக்கும் கள்ள உறவு

nathan

வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்

nathan

பெண்கள் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

nathan

உங்கள் கவனத்துக்கு காதுக்குள்ள ஏதாவது பூச்சி போய்ட்டா உடனே என்ன பண்ணணும்?

nathan

கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்?

nathan