இதற்கு உங்களுக்கு என்னென்ன தேவை:
குஸ்குஸ் – 200 கிராம்
ஹம்மஸ் 1 தேக்கரண்டி கடையில் வாங்கியது
கிரேக்க தயிர் 100 கிராம்
செர்ரி தக்காளி ஒரு கைப்பிடி அளவு (பாதியாக வெட்டிக் கொள்ளவும்)
ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டி
உலர்ந்த மற்றும் நறுக்கப்பட்ட ஆப்ரிகாட் 60 கிராம்
உப்பு
நன்கு நறுக்கிய புதிய புதினா அல்லது வெந்தயம் 2 தேக்கரண்டி
இறால் 570 கிராம் நன்கு சுத்தம் செய்து பின்பகுதி உரிக்கப்பட்டது.
½ தேக்கரண்டி சிவப்பு மிளகாய்
ஒரு ½ எலுமிச்சை பழ சாறு
நீங்கள் இதை செய்வது எப்படி?
அதிக வெப்பத்தில் கிரில்லை சூடாக்கிக் கொள்ளவும்.
குஸ்குஸ், ஆப்ரிகாட் மற்றும் ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி இவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கிண்ணத்தில் மிகவும் சூடான தண்ணீர் 260 மில்லி சேர்த்து இதை மூடி வைக்கவும், அப்படியே தனியாக இதை வைக்கவும்.
இதை 5 நிமிடம் வரை அப்படியே விட்டு விடவும், இப்போது குஸ்குஸ் சூடான தண்ணீரில் நன்கு வெந்து அந்த நீரை முழுவதும் உறிஞ்சி விடும்.
மற்றொரு கிண்ணத்தில் தயிர், புதினா, ஹம்மஸ் மற்றும் நீர் 2 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தனியே வைத்துக் கொள்ளவும்.
ஒரு பேக்கிங் தாள் எடுத்து அதன் மீது இறால்கள், சிவப்பு மிளகு, தக்காளி மற்றும் ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி இவற்றை பரப்பி வைக்கவும். இதை சுமார் 4 நிமிடங்கள் வரை இறால் நன்கு வேகும் வரை வேக வைக்கவும்
பின்னர், எலுமிச்சை சாறை இதன் மீது தெளிக்கவும்.
போர்க் உதவியுடன் குஸ்குஸ் – யை கிளறி விடவும். 4 தட்டுகளில் வேக வைத்த இறால்களை பிரித்து வைத்து கொள்ளவும், இதனுடன் குஸ்குஸ்-யும் கலந்து கொள்ளவும்.
இறால் குஸ்குஸ் உடன் சாஸ் சேர்த்து சூடாக பரிமாறவும்!