29.8 C
Chennai
Thursday, Aug 21, 2025
WhatsApp
மருத்துவ குறிப்பு

உங்கள் குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வேண்டுமா?

குறட்டை விடுவது இயல்பான ஒன்றுதான்.

ஆனால், உடன் தூங்குபவர்களின் குறட்டையால் பலரும் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள்.

தூங்கும் நேரத்தில் அருகில் ஒருவர் குறட்டை விட்டால் அது எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.

இதனை இயற்கைமுறையில் கூட போக்க முடியும்.

ஒரு டம்ளர் நீரில் 2 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின் அந்நீரால் இரவில் தூங்கும் முன் வாயைக் கொப்பளியுங்கள்.

வேண்டுமானால் இரவில் படுக்கும் முன் புதினா எண்ணெயை நன்கு சுவாசித்துக் கொள்ளுங்கள்.
இதனாலும் குறட்டையைத் தவிர்க்கலாம்.

தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை 2 துளி குடியுங்கள்.

இல்லாவிட்டால், 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் தேன் கலந்தும் சாப்பிடலாம்.

ஒரு பெரிய பௌலில் சுடுநீரை நிரப்பிக் கொள்ளுங்கள்.

பின் அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பின்பு அந்நீரில் ஆவி பிடியுங்கள். இப்படி தினமும் செய்தால், குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நெய்யை, மூக்கின் இரண்டு துவாரங்களிலும் விடுங்கள்.

இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.

1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடியுங்கள்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள்.

இந்த பாலை தினமும் இரவில் படுக்கும் முன் குடித்தால், குறட்டை பிரச்சனை நீங்கும்.

ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த நெட்டில் இலைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டிக் குடியுங்கள்.

குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட, 1-2 பூண்டு பற்களை சாப்பிட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடியுங்கள்.

1 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் தூங்குவதற்கு முன் குடித்து வாருங்கள். இதனால் மெதுவாக குறட்டை பிரச்சனை குறைந்திருப்பதைக் காணலாம்.

ஒரு கப் சுடுநீரில் சிறிது சீமைச்சாமந்தி பூக்கள் அல்லது சீமைச்சாமந்தி டீ பேக்குகளை வைத்து 10 நிமிடம் ஊற வையுங்கள்.

பின் அதை வடிகட்டி, தினமும் இரவில் படுக்கும் முன் குடியுங்கள்.

வெந்தயத்தை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் படுக்கும் முன் நீருடன் விதைகளை சாப்பிடுங்கள்.

இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது சேஜ் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்நீரால் ஆவி பிடியுங்கள்.

கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு இறக்கி வடிகட்டி தேன் கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடியுங்கள்.

Related posts

தொிந்துகொள்ளுங்கள்! காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

ஒற்றைத்தலைவலியைப் போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

nathan

இந்த 10 தவறுகளைச் செய்யாதீர்கள் இளைஞர்களே

nathan

குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்?

nathan

கற்பையும், உயிரையும் பலி வாங்கும் நட்பு

nathan

ஆரோக்கியத்தில் ஆண்களை விட பெண்களே வலிமையானவர்கள்

nathan

உங்க குழந்தைக்கு இந்த அறிகுறியெல்லாம் இருந்தா அலட்சியப்படுத்தாதீங்க..

nathan

உங்களுக்கு தெரியுமா மஞ்சளை யாரெல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது ?

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவுகள் உங்க மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும்!

nathan