அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முதுகு அழகு பெற…

bodycare_imageகுளிக்கும் போது நாம் அதிகம் கவனம் செலுத்தாத பகுதி முதுகு. இதனால் பொதுவாக முதுகுப் பகுதி அழகிழந்து மங்கலாக தோற்றம் அளிக்கிறது. அழகான முதுகு தெரியும் வகையில் பிறர் அணியும் உடைகளைப் பார்த்து பொறாமை பட வேண்டாம்!

குளிக்கும் போது முதுகு தேய்க்க உங்கள் கைகளை விட பிரஷ் உபயோகிப்பது நல்லது. முதுகுப் பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைப்பிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது.

வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இது முதுகிற்கு நல்ல பொலிவை தரும்.

முதுகை “ஸ்க்ரப்” செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும்.

கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோக்க விருப்பமில்லை என்றால், வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.

உலர்ந்த சருமத்திற்கு:-

இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன், நான்கு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை சேர்க்கவும். இந்தக் கலவையால் முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும்.

எண்ணெய் பசை சருமத்திற்கு:-

இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இதைக் கொண்டு முதுகை நன்றாக தேய்த்து பின் கழுவவும்.

இது மட்டுமில்லாமல் நேராக நிமிர்ந்து நடப்பதும் உங்கள் முதுகிற்கு அழகை சேர்க்கும்.

Related posts

முயன்று பாருங்கள் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் உருளைக்கிழங்கு!!

nathan

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா

nathan

சூப்பர் டிப்ஸ் முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

nathan

விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவதன் நன்மை, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் விளக்கெண்ணெய்

nathan

உரோமத்தை நீக்கும் முறைகள்!..

sangika

சுருக்கம் நீங்க… இளமை நீடிக்க!

nathan

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம் ஃபேஸ் பேக்

nathan

இதோ ஈஸியான டிப்ஸ்… முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan