mealmakerpotatomasala 1645713957
Other News

மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 சிறிய துண்டு

* பிரியாணி இலை – 1

* வெங்காயம் – 1 (பெரியது, பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2

* தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* உருளைக்கிழங்கு – 1 (பெரியது, தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

* மீல் மேக்கர் – 1 கப்

* பால் – 1/2 கப்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கிளறி நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

* அதன் பின் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் பால் ஊற்றி, கொத்தமல்லியை தூவி கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் உருளைக்கிழங்கு மசாலா தயார்.

Related posts

நடிகர் பகத் பாசில் சொத்து மதிப்பு..

nathan

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து..

nathan

”அட்லி ஹாலிவுட் போனால் அவருடன் நானும் சென்றுவிடுவேன் “ – நடிகர் யோகிபாபு

nathan

கமல் கேட்ட ஒரு கேள்வி..! – விழி பிதுங்கிய வனிதா மகள் ஜோவிகா..!

nathan

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் சாவு

nathan

2 நாட்களில் நடக்கும் சனி பெயர்ச்சி- துரதிஷ்ட வலையில் சிக்கப்போகும் ராசிகள்

nathan

துருக்கி சென்றுள்ள தளபதி.. புகைப்படத்தால் உற்சாகமான விஜய் ரசிகர்கள்..

nathan

நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்…?

nathan

மகளின் திருமணத்தை பார்த்து கண்ணீர் விட்டு அழுத அமீர்கான்..

nathan