26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
அழகு குறிப்புகள்

மசாலா சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 1

மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி

மல்லிப்பொடி – 1 தேக்கரண்டி

ஓமம் – 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.

பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.

சப்பாத்திக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் செய்து சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பில் போட்டு இருபக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இப்போது சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.

Source:maalaimalar

Related posts

46 வயது திருமணமாகாத நடிகை -இப்படியொரு போஸ்-ஆ!!

nathan

அம்பலமான சங்கர் மருமகனின் சுயரூபம்! வெளிவந்த ரகசியம்!

nathan

நீங்கள் முடியை நீக்க தேர்ந்தெடுக்கும் பொருள் மீது அதிக கவனம் என்பது இருத்தல் வேண்டும்.

nathan

யார் இவர்? நபரின் தோள்மீது சாய்ந்தபடி லொஸ்லியா புகைபடம் கசிந்தது !

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆரஞ்சு தோலை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்…!!

nathan

வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ கவலை வேண்டாம்..சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன…

sangika

கற்பு, கன்னி தன்மை போன்ற விஷயங்கள் பெண்களுக்கு மட்டும் தானா..?

sangika

முகம் பொலிவு பெற அற்புத பலன்தரும் அழகு குறிப்புக்கள்

nathan

இதோ எளிய நிவாரணம்! விரல் நுனிகளில் தோல் உரிவதைத் தடுக்க சில வழிகள்!!!

nathan