sl3946
சிற்றுண்டி வகைகள்

சாமை சிறுபருப்பு  முள்ளு முறுக்கு

என்னென்ன தேவை?

சாமை மாவு – 100 கிராம்,
அரிசி மாவு – 50 கிராம்,
சிறுபருப்பு – 50 கிராம்,
பொட்டுக்கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிது,
உப்பு, மிளகாய்த்தூள், சீரகம், எண்ணெய் – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து சிறுபருப்பை லேசாக வறுத்து ஆறவிடவும். இதை மிக்ஸியில் நைஸாக பொடித்து சலிக்கவும். பொட்டுக் கடலையையும் பொடித்து சலிக்கவும். சாமை மாவையும் அரிசி மாவையும் லேசாக வறுத்து சலித்து அனைத்தையும் கலந்து உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், மிளகாய்த்தூள், சூடான எண்ணெய், வெண்ணெய் சேர்த்து தேவையான நீர் விட்டு பிசைந்து 5 நிமிடம் மூடி வைக்கவும். எண்ணெயைக் காயவிட்டு பெரிய பெரிய முறுக்காக ஒவ்வொன்றாக பிழிந்து இருபுறமும் வேகவைத்து எடுத்து ஆறியதும் உடைத்து பரிமாறவும்.

sl3946

Related posts

எக் பிரெட் உப்புமா

nathan

காலிஃப்ளவர் பக்கோடா

nathan

சத்தான முடக்கத்தான் – கம்பு தோசை

nathan

மனோஹரம்

nathan

கேழ்வரகு ஸ்டப்டு இட்லி

nathan

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

nathan

குழந்தைகளுக்கான நூடுல்ஸ் – கார்ன் கட்லெட்

nathan

ரெட் ரைஸ் வெஜ் மிக்ஸ்

nathan

பனீர் நாண்

nathan