26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
d783caf6 030a 4ab3 9d6f e4e4d005fd4b S secvpf
கர்ப்பிணி பெண்களுக்கு

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசலாமா?

தாயானவள் ஒவ்வொரு நாளும் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் அசைவை உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம்.

* முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேச ஆரம்பியுங்கள். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம்.

* குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தை அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

* கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

* குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். கர்ப்ப காலத்தில் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

* அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.

d783caf6 030a 4ab3 9d6f e4e4d005fd4b S secvpf

Related posts

பிரசவத்தினால் உண்டாகும் ஸ்ட்ரெச் மார்க்கை மறையச் செய்யும் மேங்கோ பட்டர் !!

nathan

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி!

nathan

பாலூட்டும் அம்மா எல்லாவற்றையும் சாப்பிடலாமா?

nathan

கர்ப்பிணிக்கு வலிப்பு இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு வலிப்பு வருமா?

nathan

கருவுக்கோர் உணவு. Dr. கந்தையா குருபரன். மகப்பேற்றியல் நிபுணர்

nathan

பிரசவ கால வலி பிரச்சனையாகிவிட்டதா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தாய்மார்கள் எப்பொழுதெல்லாம் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது?

nathan

கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் அளிக்கும் நன்மைகள்!!!

nathan

கர்ப்பிணிகள் காஸ்மெடிக்ஸ் உபயோகிப்பது ஆபத்தானது

nathan