hqdefault
சைவம்

பாகற்காய் வறுவல்

தேவையான பொருட்கள் :
பாகற்காய் – 5-6
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
உப்பு தேவைகேற்ப
தயிர் – 1 ஸ்பூன்
புளி – சின்ன கோலி குண்டு அளவு
நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
சின்ன சீரகம் – 1/2 ஸ்பூன்

செய்முறை :
பாகற்காயை அரை வட்டமாக மெலிதாக நறுக்கி கொள்ளவும் .
கடாயில் நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு சின்ன சீரகம் சேர்த்து தாளித்து பாகற்காய் சேர்த்து வதக்கவும் .

சிறுது வதங்கியவுடன் மிளகாய் தூள், உப்பு ,தயிர் ,புளி தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும் .
கையால் நசுக்கி பார்த்து பாகற்காய் வெந்தவுடன் மூடாமல் மேலும் சிறுது எண்ணெய் விட்டு சிறு தீயில் சுருள விட வேண்டும் .

அடி படிக்காமல் நடுவில் கிளறி விடவும் .இது கொஞ்சம் நேரம் எடுக்கும் (தோராயமாக 20 நிமிடம் ) நடுவில் அடி படிப்பது போல் இருந்தால் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளவும் .
பாகற்காய் நன்றாக சுருண்டு மொரு மொறுப்பாக வரும் சமயம் அடுப்பை அனைத்து விடவும் .
இதை சுடு சாதத்தில் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும் கசப்பும் தெரியாது .சாம்பார் சாததிற்கு தொட்டு கொள்ளவும் நன்றாக இருக்கும் .எண்ணெயும் அதிகம் சேர்க்க வில்லை .diet உள்ளவர்களும் இப்படி செய்து சாப்பிடலாம்.
hqdefault

Related posts

காளான் dry fry

nathan

சத்தான பாலக் தயிர் பச்சடி

nathan

பீட்ரூட் ரைஸ்

nathan

தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு

nathan

சமைக்கலாம் வாங்க! கடாய் பனீர்- Restaurant Style Karahi Paneer :

nathan

கொப்பரிக்காய வங்காய சிண்டசெட்டு புளுசு

nathan

வெங்காயத்தாள் கூட்டு செய்வது எவ்வாறு என்பதனை பார்ப்போம்!!

nathan

சுவையான உருளைக்கிழங்கு குடைமிளகாய் சப்ஜி

nathan

கறிவேப்பிலை மிளகு குழம்பு

nathan