30.4 C
Chennai
Wednesday, May 21, 2025
ஆரோக்கியம்தொப்பை குறைய

எடையை குறைக்கும் உடற் பயிற்சிகள்

Gym-exercises-to-reduce-weight-quicklyசைக்கிள் : உடற்பயிற்சிக்கு என்றே வடிவமைக்கப்பட்ட இந்த சைக்கிளில், ஒவ்வொருவரும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, 5 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை பயிற்சி செய்யலாம். இது கால்களுக்குத் தனி அழகைத் கொடுக்கும். இதில் இருக்கும் மீட்டர் மூலம், ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் பயிற்சி செய்கிறோம் என்று குறித்துக் கொள்ளலாம்.

 

வைப்ரேட்டர் : மின்சாரத்தால் இயக்கப்படும் இந்த மெஷினின் பெல்ட்டை அதிகப்படியான சதைகள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு நிமிடம் வீதம் 5 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். கர்ப்பப்பை தொந்தரவு இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டாம். இது, உடல் உறுப்புகளுக்கு மசாஜ் செய்வதுபோல் இருக்கும்.

வாக்கர் : வாக்கர் எனப்படும் ‘டிரட்மில்’லை மருத்துவமனைகளில் பார்த்திருக்கலாம். இது நின்ற இடத்திலேயே ஜாகிங் செய்வது போன்று, ரோல்களால் இயக்கப்படும் ஓர் இயந்திரம். இதில் 10 நிமிடம் ஓடுவது, வெளியில் 5 கிலோமீட்டர் ஓடுவதற்கு ஒப்பாகும். இதன் மூலம் உடல் முழுவதுமுள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

ஸ்டெப்பர் : இருபுறமும் கால் வைக்க இரு பெடல்கள் இருக்கும். கைகை ஹேண்டில் பாரில் பிடித்துக் கொண்டு, கால்களால் பெடல் செய்யும்போது கால்களில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைக்கப்பட்டு, கைகளும், தோள்களும் பலம் பெறுகின்றன.

உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லுமுன் உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசித்துவிட்டுச் செல்லவும். தகுந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவது நல்லது.

Related posts

ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!….

sangika

ஏன் தெரியுமா? குறிப்பாக பருவபெண்களுக்கு பெண்கள், புறாக்களை வளர்க்கவோ அல்லது வைத்திருக்கவோ கூடாது

nathan

எளிதில் தொப்பையை குறைக்கும் வழிகள்!

nathan

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை..

nathan

இதை சாப்பிட்டு தொபையைப்க் குறைக்கலாம்!…

sangika

சூப்பர் டிப்ஸ்…

nathan

வில்வம் ஓர் அற்புத மூலிகை சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்

nathan

உடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்…..

sangika

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika