26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
pr
சிற்றுண்டி வகைகள்

சிக்கன் போண்டா செய்ய !!

தேவையான பொருட்கள்:

சிக்கன் கைமா – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
போண்டா மாவு – 250 கிராம்
சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – 2 கொத்து
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு
பொட்டுக்கடலை – 50 கிராம்
இஞ்சி – 2 சிறிய துண்டு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். எலும்பில்லா சிக்கனை கொந்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்துக்கொள்ளவும்.

அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெய்யில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். சூப்பரான சிக்கன் போண்டா தயார்.

-webdunia

Related posts

வரகு பொங்கல்

nathan

உளுந்து வடை

nathan

சூப்பரான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படி

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

ஆடிக்கூழ்

nathan

அவல் ஆப்பம்

nathan

புழுங்கல் அரிசி முறுக்கு

nathan

அவல் தோசை

nathan

சாமை சிறுபருப்பு  முள்ளு முறுக்கு

nathan