தேவையான பொருட்கள்:
சேமியா – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
வெல்லப்பாகு – ஒன்றரை கப்,
பாசிப்பருப்பு – அரை கப்,
நெய் – 150 கிராம்,
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை,
முந்திரி, திராட்சை – தலா 25 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, ஜாதிக்காய் பொடி – ஒரு சிட்டிகை.
செய்முறை:
* சேமியாவை வேகவைத்து தண்ணீரை வடித்து விட்டு தனியாக வைக்கவும்.
* பாசிப்பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
* முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.
* சிறிதளவு நெய்யில் தேங்காய்த் துருவலை சிவக்க வறுக்கவும்.
* அதனுடன் வெல்லப்பாகு. வெந்த சேமியா, வேகவைத்த பாசிப்பருப்பு, கேசரி பவுடர் சேர்த்து, நெய் விட்டு நன்கு கிளறி, சற்று தளர இருக்கையில் இறக்கி… வறுத்த முந்திரி திராட்சை, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, இளம் சூட்டில் பரிமாறவும்.
* சுவையான சேமியா இனிப்பு பொங்கல் ரெடி.