30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சைவம்

பீட்ரூட் சாதம்

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் – 2 பாஸ்மதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன் சீரகதூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, மூடி போட்டு மூடி, 3 விசில் விட்டு இறக்கவும். பிறகு பீட்ரூட்டை துருவி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு, சிறிது உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும். பீட்ரூட் வெந்ததும் அதனை இறக்கி, சாதத்துடன் கலந்து, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும். இப்போது சுவையான பீட்ரூட் சாதம் ரெடி!!!

Related posts

சுவையான உருளைக்கிழங்கு மோர் குழம்பு

nathan

பன்னீர் பட்டாணி மசாலா

nathan

புளி சாதம் எப்படிச் செய்வது?

nathan

சுவையான குடைமிளகாய் காளான் மிளகு வறுவல்

nathan

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

nathan

சூப்பரான கொண்டைக்கடலை குருமா

nathan

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்

nathan

சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் பாலக்கீரை தால்

nathan

கத்தரிக்காய் வதக்கல்

nathan