28.6 C
Chennai
Saturday, May 18, 2024
1452496437 3528
சைவம்

பொங்கல் அன்று செய்யப்படும் மஞ்சள் பூசணி மொச்சை பொரியல்

தேவையான பொருட்கள்:

மஞ்சள் பூசணிக்காய் – 1/2 கிலோ
வெங்காயம் – 1
உளுந்து – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
கடுகு – 1/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

தயார் செய்ய வேண்டியவை:

முதலில் பூசணிக்காய் (பெரிய துண்டுகளாக), வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

மொச்சையை தோல் உரித்து வைத்து கொள்ளவும்.

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிறகு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

பின் அதில் நறுக்கிய பூசணிக்காயை போட்டு சிறிது நேரம் பிரட்டி, மிளகாய் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து மொச்சையை சேர்த்து, தட்டை வைத்து மூடி வேக வைக்கவும். சிறு தணலில் வேகவைக்கவும்.

காயானது வெந்து, தண்ணீரானது வற்றியதும், அதனை இறக்கி விடவும். சுவை மிகுந்த மஞ்சள் பூசணி மொச்சை பொரியல் ரெடி.

குறிப்பு:

1. மொச்சை பயன்படுத்தும்போது பச்சையாக உள்ளதா என பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.

2. பூசணிக்காயில் தண்ணீர் சத்து உள்ளதால் அதிகம் தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

3. பூசணிக்காயை பயன்படுத்துவதற்கு முன் தோலை நீக்கிவிட வேண்டும் (விரும்புபவர்கள் அப்படியே போடலாம்).

இதனை அப்படியே சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

1452496437 3528

Related posts

சுவையான புதினா – கொத்தமல்லி சாதம்

nathan

அபர்ஜின் பேக்

nathan

பருப்பு முள்ளங்கி வறுவல்

nathan

ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம்

nathan

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

nathan

தவா மஸ்ரூம் ரெசிபி

nathan

பூரிக்கு சூப்பரான சைடு டிஷ் உருளைக்கிழங்கு குருமா

nathan

முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி

nathan

வெண்டைக்காய் – ஓமம் மோர்க் குழம்பு

nathan