30.4 C
Chennai
Thursday, May 29, 2025
22 62a2700590554
Other News

சுவையான காராமணி வடை – செய்வது எப்படி

காரவடை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகும். ஹோட்டல் போல் சுவையாக சுடுவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான விஷயங்கள்

வெள்ளைக் காராமணி – 1 கப்

வரமிளகாய் – 2

சோம்பு – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – சிறிது துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில் காராமணியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன், வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பௌலில் போட்டு, அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான சுவையில் காராமணி வடை தயார்.

Related posts

கோவில் விழாவில் மோதிக்கொண்ட யானைகள்

nathan

ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் கோடீஸ்வரி பெண்!

nathan

அந்த விசயத்துல கொஞ்சம் வீக்; பலவீனத்தை பயன்படுத்தி 1.25 லட்சம் சுருட்டல்

nathan

பிக் பாஸ் டைட்டிலை வென்ற முத்துக்குமரனின் பரிசுத் தொகை

nathan

ஈரோடு ‘ஆண்டவர் லேத் ஒர்க்ஸ்’ வெற்றிக்கதை!30 கோடி டர்ன்ஓவர்

nathan

ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் இரண்டு மனைவியும் கர்ப்பம்..

nathan

இந்த வாரம் சிக்கினது யாரு தெரியுமா?அடுத்த ரெட் கார்ட்டிற்கு பிளான் போட்ட மாயா..

nathan

பிசினஸ்மேனை 2வதாக திருமணம் செய்கிறாரா டிடி?

nathan

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா நடிகர் அப்பாஸ்?

nathan