31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
கண்கள் பராமரிப்பு

கருவளையம் போக்கும் வெள்ளரிக்காய்

கருவளையம் நீங்க விரைவான, பாதுகாப்பான, எளிய வழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவது தான். வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்‌ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து, சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தைப் போக்குகின்றன. வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச்சாற்றைப் பருத்தியில் நனைத்து, கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும்.

கண் வீங்கிப்போய் இருந்தால், வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள் வைத்தால், அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும். வெள்ளரியை முகத்தில் தடவினால், முகம்பொலிவு பெறும். வெள்ளரிச்சாற்றுடன், சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும்.

சூரியனில் இருந்து வரும் புறஊதாக்கதிர்வீச்சு, சருமத்தைப் பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும், சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புறஊதாக்கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது. வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து, தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்.

Related posts

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு

nathan

கண்ணழகையே கெடுத்து விடும் கருவளையம்…..

sangika

முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:

nathan

கருவளையத்தை நீக்க

nathan

கண்களை கவர்ச்சியாக காட்ட இத செய்யுங்கள்!…

sangika

கருவளையங்களை போக்க சூப்பரான டிப்ஸ்

nathan

கண்ணை என்ன செய்யலாம்?

nathan

கண்களில் உண்டாகும் சதைப்பையை தடுக்கும் ஈஸியான வழிகள்!!

nathan

புருவ அடர்த்திக்குகாரணம் என்ன?

nathan