2022 ஐக்கிய இராச்சியத்தில் குரங்கம்மை பரவல் குரங்கம்மை நோய் பரவியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான நைசீரியாவுக்கு பயணம் செய்த பிரித்தானியரிடம் அறிகுறிகள் தேன்பட்டதைத் தொடர்ந்து பரவத் தொடங்கியது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று நாட்டின் முதலாவது குரங்கம்மை அறிகுறிகள் கண்டறியப்பட்டன. மே மாதம் 4 ஆம் தேதி ஐக்கிய இராச்சியத்திற்கு திரும்பிய தனியர் மூலம் நோய் பரவல் தொடங்கியது.
தற்போது இது எப்படி பரவுகின்றது என்ன அறிகுறிகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
குரங்கம்மை எப்படிப் பரவும்?
குரங்கு, எலி வகையைச் சேர்ந்த விலங்குகளின் வழியாக.
பாதிக்கப்பட்ட விலங்களின் ரத்தம், உமிழ்நீர், ஆறாத காயங்கள் வழியாக.
பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை முறையான வழியில் சமைக்காமல் உட்கொள்ளும்போது.
வேகமெடுக்கும் Monkeypox பரவல்… முதல் முறையாக வேல்ஸில் பாதிப்பு உறுதி
மனிதர்களுக்கு எப்படி பரவுகின்றது?
மனிதரிடமிருந்து மனிதருக்குக் குரங்கம்மை நோய் எளிதில் பரவாது.
பாதிக்கப்பட்டவர்களுடன் நீண்டகாலம் நெருக்கமான தொடர்பில் இருந்தால் பரவக்கூடும்
. பாதிக்கப்பட்டவர்களின் ஆறாத காயங்கள், மூச்சு வழியாகப் பரவலாம்.
உயிருக்கு எமனாகும் நெஞ்செரிச்சல்… இந்த தவறுகளை தயவுசெய்து செய்யாதீங்க
அறிகுறிகள் என்ன?
குரங்கம்மையின் அறிகுறிகள் 14 முதல் 21 நாள்கள் வரை நீடிக்கலாம்.
குரங்கம்மை கடுமையானால் சில வேளைகளில் நிமோனியா காய்ச்சல், கண் பார்வையின்மை, மூளைக் காய்ச்சல் உண்டாகலாம்.
சோர்வு, காய்ச்சல், உடல் வலி, மூட்டுகளில் வீக்கம்.
காய்ச்சல் ஏற்பட்டு 3 நாள்களுக்குப் பின் உடலில் அரிப்பு.
முகத்தில் ஆரம்பித்து, கை, கால் பாதங்கள் வரை அரிப்பு.
சிகிச்சை உண்டா?
தனிப்பட்ட சிகிச்சை முறை நடப்பில் இல்லை. நோய்த் தடுப்பு மருந்து குரங்கம்மையை 85% வரை தடுக்கும் ஆற்றல் கொண்டது.