ld3697
எடை குறைய

எடை குறைக்கும் இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ்

சற்றே பூசினாற்போல இருக்கும் எல்லோருக்குமே எடையை குறைக்க ஆசைதான். யார் என்ன சொன்னாலும் அதை அடுத்த நாளே பின்பற்றிப் பார்ப்பார்கள். அதிகபட்சம் 4 நாட்களுக்கு மேல் அவற்றைச் செய்தாலே அதிகம். உடற்பயிற்சி முதல் உணவுக்கட்டுப்பாடு வரை எல்லா விஷயங்களுமே இப்படித்தான். டயட் இருக்க ஆசைதான். ஆனா, யாராவது டயட் சாப்பாடு செய்து கொடுத்தா நல்லாருக்கும்… ஒருத்தருக்காக அப்படி சமைக்கிறதுதான் கஷ்டமே’ என்கிறவர்களுக்கு வழி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காவேரி. உடல் இளைக்கச் செய்கிற டயட் உணவுகள் செய்வதில் நிபுணி இவர்!

பல வருஷங்களா கேட்டரிங் பிசினஸ் பண்ணிட்டிருக்கேன். கால மாற்றத்துக்கேத்தபடி அப்பப்ப மெனுவை மாத்திட்டே இருப்பேன். அந்த வகையில சமீப காலமா எல்லாரும் டயட் உணவுகளுக்கு மாற ஆரம்பிச்சிட்டாங்க. வீட்டுக்கு ஒருத்தரோ, ரெண்டு பேரோ பருமன் பிரச்னையால அவதிப்படறாங்க. டாக்டரோ, டயட்டீஷியனோ சொல்ற மாதிரியான டயட்டை அவங்களால செய்ய முடியறதில்லை. சிலருக்கு நேரம் இருக்கிறதில்லை. சிலருக்கு சுவையா சமைக்கத் தெரியறதில்லை.

நான் கேட்டரிங் ஆர்டர் எடுக்கிற இடங்கள்ல நிறைய பேர், ‘டயட் சாப்பாடு செய்து தர்றீங்களா’னு கேட்டாங்க. தொடர்ச்சியா இப்படி பலர் கேட்கவும், முறைப்படி ஒரு டயட்டீஷியன்கிட்ட பேசி, எடை குறைக்கிற உணவுகளைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, இன்ஸ்டன்ட் மிக்ஸ் செய்ய ஆரம்பிச்சேன். முதல்ல அக்கம்பக்கத்துல உள்ளவங்களுக்கு சாம்பிள் கொடுத்து டெஸ்ட் பண்ணினதுல எல்லாருக்கும் பிடிச்சது. அந்தநம்பிக்கையில தான் வெளியில ஆர்டர் எடுத்துப் பண்ணிட்டிருக்கேன்.

வெயிட் குறைக்க உதவற கோதுமை, பார்லி, தினை, கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி மாதிரியான சிறுதானியங்கள், பச்சைப் பயறு… இதையெல்லாம் வச்சு அடை மிக்ஸ், தோசை மிக்ஸ், கொழுக்கட்டை மிக்ஸ், புட்டு மிக்ஸ், கஞ்சி மிக்ஸ், கிச்சடி மிக்ஸ்னு நிறைய பண்றேன். ‘எடையை குறைக்கிற சாப்பாடா இருக்கணும்… அதை சமைக்க பெரிசா மெனக்கெடவும் வேண்டாம்’னு நினைக்கிறவங்க இதையெல்லாம் அஞ்சு, பத்து நிமிஷத்துல செய்து சாப்பிடலாம்.

சுவையும் ரொம்ப நல்லா இருக்கும்…” என்கிற காவேரி, 3 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்க நம்பிக்கை தருகிறார். வறுத்து அரைச்சு செய்யறதால இதையெல்லாம் 6 மாசம் வரை வச்சிருந்து உபயோகிக்கலாம். அரை கிலோ மிக்ஸ் 60 ரூபாய்லேருந்து விற்கலாம். கலவையைப் பொறுத்து விலை வேறுபடும். வீட்டு உபயோகத்துக்கு செய்யறதுலயே கொஞ்சம் கூடுதல் அளவைத் தயாரித்து பிசினஸாகவும் பண்ணலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிற காவேரியிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான இன்ஸ்டன்ட் டயட் உணவு மிக்ஸ் செய்யக் கற்றுக் கொள்ளலாம். கட்டணம் 500 ரூபாய்.

ld3697

Related posts

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான சில டிப்ஸ்…

nathan

கொழுப்பை குறைக்கும் பிரண்டை

nathan

உடல் எடையை குறைக்க வாழைப்பழம் எப்படி பயன் தருகிறது என தெரியுமா?

nathan

தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறைவதை உங்களால் உணர முடியும்….

sangika

மதிய உணவிற்கு பின் இதை குடிச்சா, உடல் எடை குறையுமாம் தெரியுமா?

nathan

உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை

nathan

உடல் பருமனைக் குறைக்க சாப்பிடலாம் கத்தரிக்காய்

nathan

ஒரு வாரத்தில் உங்களின் பின்பக்க கொழுப்பை குறைக்க‌ 3 எளிய வழிகள்

nathan

உங்களுக்கு ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா..? இதை முயன்று பாருங்கள்

nathan