மொத்தம் 12 நாடுகளில் 80 பேர் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் தொலைத்தூர மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் பொதுவாக காணப்படும் இந்த குரங்கம்மை நோய்கள் தற்போது பிடித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.
இதுவரை பிரித்தானியாவில் மட்டும் 20 நபர்கள் வரை குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 12 நாடுகளை சேர்ந்த 80 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
12 நாடுகளுக்கு பரவிய குரங்கம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!REUTERS
இதுத் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அளித்துள்ள தகவலில், கூடுதலாக 50 பேர் இந்த குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகிப்பதால் அது தொடர்பான கண்காணிப்பை நடத்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடாமல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
மேலும் ஐரோப்பிய பொது சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில், இந்த குரங்கம்மை நோயானது, பிரித்தானியா, ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, கனடா, அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் நோய் பரவி இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
12 நாடுகளுக்கு பரவிய குரங்கம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
பொதுவாக அவ்வளவு எளிதாக யாருக்கும் பரவாத இந்த அரிதான வைரஸ் தொற்றுநோய், பெரும்பாலான மக்களிடம் மிதமான அறிகுறிகளுடன் தோன்றி சில வாரக் காலங்களில் குணமடைந்து விடுவதாக பிரித்தானிய சுகாதார சேவை மையம் தெரிவித்துள்ளது.
இந்த குரங்கம்மை நோய்களுக்கு குறிப்பிடதக்க எந்த தடுப்பூசியும் இல்லாத நிலையில், பெரியம்மை நோய்க்கான தடுப்பூசிகள் 85 சதவிகிதம் வரை பயனளிப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.