25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
raw mango sambar
சமையல் குறிப்புகள்

சுவையான மாங்காய் சாம்பார்

மாங்காய் சீசன் ஆரம்பித்துவிட்டது. மார்கெட்டில் மாங்காய் குறைவான விலையில் கிடைக்கும். பலருக்கு மாங்காயைப் பார்த்தாலே வாயில் இருந்து எச்சில் ஊறும். அத்தகைய மாங்காயைக் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

இங்கு மிகவும் சிம்பிளான மாங்காய் சாம்பார் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள். குறிப்பாக இது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறும் இருக்கும்.

Raw Mango Sambar Recipe
தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1
துவரம் பருப்பு – 3/4 கப்
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
புளிச்சாறு – சிறு துண்டு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1 (நறுக்கியது)
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 2
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் மாங்காயை கழுவி, அதனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கி, நன்க மசித்துக் கொள்ள வேண்டும்.

பின் புளியை 1/4 கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, சாம்பார் பொடி சேர்த்து, மாங்காய் துண்டுகளையும் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி, 3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதனை சாம்பாரில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவினால், மாங்காய் சாம்பார் ரெடி!!!

Related posts

முட்டை உடையாமல் பதமாக வேக வைப்பது எப்படி? தெரிந்துகொள்வோமா?

nathan

coconut milk benefits in tamil – தேங்காய் பால் நன்மைகள்

nathan

கணவனை அசத்த….. சூப்பரான கனவா மீன் தொக்கு!….

sangika

டிப்ஸ்… டிப்ஸ்..

nathan

எண்ணெய்ப் பலகாரங்கள் செய்யும்போது . . .

nathan

புதினா பன்னீர் கிரேவி

nathan

ருசியான சமையலுக்கு சில ரகசியங்கள்

nathan

சுவையான வாழைப்பூ வடை

nathan

சூப்பரான பருப்பு ரசம்

nathan