36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
எடை குறைய

உங்கள் துணையுடன் சேர்ந்து உடல் எடையை குறைக்கும் பயிற்சிகள்

பொதுவாக தனியாக ஜிம் செல்வது, வாக்கிங் செல்வது அல்லது வேறு எங்கும் செல்வதற்கு யாருக்கும் விருப்பம் இருக்காது. இச்செயல்களை மேற்கொள்வதற்கு தம்முடன் நண்பர்கள் அல்லது துணை இருக்க வேண்டுமென்று தோன்றும். உங்கள் நண்பர்களால் உங்களுடன் எந்நேரமும் நேரத்தை செலவிட முடியாது.

ஆனால் உங்கள் துணையால் முடியும். மேலும் உங்கள் துணை உங்களுடன் நேரத்தை செலவழிக்க ஏங்குபவர்கள். எனவே உங்கள் துணையை நண்பனாக்கிக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், விரைவில் குறைக்கலாம். இப்படி செய்வதன் மூலம், துணையுடன் நேரத்தை செலவிட்டது போன்றும் இருக்கும், வாழ்க்கை முறையும் ஆரோக்கியமாக இருக்கும். சரி, இப்போது துணையுடன் சேர்ந்து உடல் எடையைக் குறைக்க உதவும் வழிகளைப் பார்க்கலாம்.

நடனம் :

படங்களில் மட்டும் தான் கணவன், மனைவி டூயட் பாட வேண்டும் என்பதில்லை. நிஜத்திலும் கணவன், மனைவி நடன வகுப்பில் சேர்ந்து கொண்டு, நடனம் கற்றுக் கொள்ளலாம். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிவதோடு, துணையுடன் சற்று ரொமான்ஸ் செய்தது போன்றும் இருக்கும்.

ட்ரெட்மில் :

ஜிம்மில் தனியாக ட்ரெட்மில்லில் ஓடுவதற்கு பதிலாக, துணையையும் உடன் சேர்த்துக் கொண்டு ஓடலாம். இதனால் இருவருக்குள் சிறு போட்டியுடன் விரைவில் உடல் எடையைக் குறைக்க முடியும்.

ஜாக்கிங் :

அதிகாலையில் வேகமாக எழுந்து, 30 நிமிடம் துணையுடன் சேர்ந்து ஜாக்கிங் மேற்கொள்ளலாம். இதன் மூலமும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்

சைக்கிளிங் :

துணையுடன் பைக்கில் சுற்றுவதற்கு பதிலாக, காலையில் சிறிது தூரம் சைக்கிளில் சென்றால், கால் மற்றும் தொடை நன்கு வலுப்பெறும். மேலும் உடல் எடையும் குறையும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா உடல் பருமன் குறைக்கும் பாட்டி வைத்தியம் !!

nathan

குறுக்கு வழியில் எடை குறைக்கலாமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தண்ணீருக்கு மாற்றாக 15 பானங்கள் எடையை குறைக்கும் அதிசயம் தெரியுமா !

nathan

பேலியோ டயட் என்றால் என்ன?

nathan

பேலியோ டயட்! ஏன்? எதற்கு? யாருக்கு?

nathan

உடல் எடையை இப்படி கூட குறைக்க புதுவிதமான உருளைக் கிழங்கு வைத்தியம்!!

nathan

உடல் எடையை குறைக்க அற்புதமான நாட்டு வைத்திய குறிப்புகள்!அற்புதமான எளிய தீர்வு

nathan

சரியான முறையில் எளிமையாக உடல் எடையை குறைக்க இவற்றை முயன்று பாருங்கள்

sangika

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்

nathan