astro5 1528280919
Other News

ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் உங்களுக்கு இப்படி இருந்தால் செல்வம்,புகழ் கிடைக்குமாம்!தெரிந்துகொள்வோமா?

மனிதனை உயர்ந்த ஜீவனாக்குவது அவனது ஆறாவது அறிவாகும். மனித உடலில் புத்தி அல்லது அறிவாற்றலைக் கட்டுப்படுத்தும் உறுப்பு மூளை. ஒருவனது அறிவு, விவேகம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரது வாழ்க்கை அமையும் விதத்தை, புத்தி ரேகையின் அமைப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

புத்தி ரேகை எனப்படுவது ஆயுள் ரேகைக்கு மேலே குரு மேட்டுக்கு கீழிருந்து ஆரம்பித்து நேராக உள்ளங்கையின் புதன் மேட்டுக்கு கீழே உள்ள செவ்வாய் மேட்டில் முடியும் ஒரு ரேகையாகும். சிலசமயம் இந்த ரேகை செவ்வாய் மேட்டிலோ, சந்திர மேட்டிலோ முடிவடையலாம். இந்தப்புத்தி ரேகை தான் ஒருவருடைய அறிவாளித்தனம், நீதி, நேர்மை, மனநிலைமைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தப் புத்தி ரேகையைத்தான் பிரதானமாக ஆராய வேண்டும்.

அறிவாளிகள் கையில் இந்தப் புத்தி ரேகையான மிகவும் எடுப்பாகவும், மெலிந்தும் காணப்படும். எவ்வித வளைவுகளோ, கோணல்களோ இல்லாது காணப்படும். இவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகளாக விளங்குவர். சமுதாயத்தில் செல்வம், செல்வாக்கு, புகழ் ஆகியவற்றைப் பெற்று இருப்பார்.

q

இந்த ரேகை மெலிந்து எடுப்பாக அமையாமல் தடித்து காணப்பட்டால் எல்லாவற்றிலும் முட்டாள்தனமாகவும், பரபரப்பாக நடந்து கொள்கிறவர்களாகவும் இருப்பார்கள்.

புத்தி ரேகையானது ஆயுள் ரேகை வரை வந்து அதன் பின்னர் மணிக்கட்டை நோக்கி திரும்பி இருந்தால் எதிலும் நிதானப்போக்கு இல்லாதவர்களாகவும், உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும், கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், முன் எச்சரிக்கையுடன் செயல்படுபவராகவும் இருப்பார்கள்.

ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கை வழியே சென்று புத்தி ரேகை கிளைகளாகப் பிரிந்துவிடலாம். இப்படி இருக்குமேயானால் புத்தி ரேகை அமைந்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வி, கலை, பொது அறிவு அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். ஏதாவது ஒரு திறமையைப் பயன்படுத்தி, வெற்றி காணும் வாய்ப்பு இவர்களுக்கு நிறைய உண்டு.

 

ஆயுள் ரேகையும், புத்தி ரேகையும் இணைந்து உடனேயே பிரிந்து உள்ளங்கையின் அடிப்புறத்தை நோக்கி சாய்ந்து செல்லுமானால் கலைஞர்களாக இருப்பார்கள்.

q 1

புத்தி ரேகையும், ஆயுள் ரேகையும் தனித்தனியே பிரிந்திருக்குமேயானால் தற்பெருமை உடையவர்களாக இருப்பார்கள். என்றாலும் தன்னம்பிக்கை இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இவர்கள் அதிகமாகப் பேசுவார்கள்.

Related posts

தளபதி விஜய் சங்கீதாவின் புகைப்படங்கள்

nathan

பண தகராறில் க.காதலனை வெட்டி கொன்று பெண் தூக்கில் தற்-கொலை

nathan

உடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க சித்தர் கூறிய வழிகள்

nathan

ஒட்டு கேட்ட ஸ்ருத்திகா..! பாத்ரூமில் கணவர் செய்த வேலை..

nathan

கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரியின் உடல்!

nathan

வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

nathan

நாயகி ஸ்ரீ திவ்யாவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன் – நடிகர் சூர்யா

nathan

தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் – திரையுலகினர் இரங்கல்

nathan