da8d731e5ed58c83baece8254b7d9d30
சரும பராமரிப்பு

வசிகரத்தை அள்ளித் தரவல்ல ஆரஞ்ச் பழங்களின் அழகு டிப்ஸ்

1. கண்கள் “ப்ளிச்” ஆக சில குறிப்புகள் இதோ…..

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் “ப்ளிச்” ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

2. ஜொலி ஜொலிக்க…

தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா – இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.

இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

3. வடுக்கள் நீங்க…

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்?

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன்,
சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை… இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

4. கருமையை விரட்டியடிக்க….
சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்…

1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது – கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

5. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை…
தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், பிஞ்சு கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ… எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள்.

அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

6. ஆரஞ்சு ஃப்ருட் பேக்…
வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக்.

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.da8d731e5ed58c83baece8254b7d9d30

Related posts

வேலைக்கு போகும் பெண்களுக்கான எளிமையான ஒப்பனை

nathan

பெண்களே நயன்தாரா மாதிரி எப்பவும் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா?

nathan

இரவு க்ரீமை தேர்வு செய்வது எப்படி?

nathan

பார்லர் போகாமலேயே பளிச்சிட வேண்டுமா?

nathan

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan

சருமத்திற்கு சன் ஸ்க்ரீன் அவசியமா?

nathan

கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்ட வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

‘இந்த’ ஃபேஷியல் உங்களுக்கு பளபளப்பான மின்னும் சருமத்தை தருமாம்…!

nathan

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika