உருளையின் தோல்களை சரும எரிச்சலை ஆற்றும் மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். உலகில் சில பகுதிகளில் இதனை சோப்பாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். காலம் மாறமாற உருளை நம்முடைய சமையலில் முக்கிய பொருளாக பயன்பட ஆரம்பித்தது.
உருளை சாப்பிடுவதால் ஏற்படும் சருமப் பாதுகாப்பு
* இதில் உள்ள பாலிபினால்ஸ் சூரிய கதிர்களால் ஏற்படும் கருமையை நீக்கி, களைப்படைந்த சருமத்தை சீராக்கும்.
* உருளை சாற்றில் துத்தநாகம் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள வடு மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.
* இதில் உள்ள இரும்புச் சத்து உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவும்.
* அசிலைக் ஆசிட் தன்மை கொண்டதால், இயற்கையாகவே சருமம் பளிச்சிட உதவும். அசிலைக் மற்றும் சைடோகைன் இரண்டும் முகப்பருவினால் ஏற்படும் பாதிப்பையும் நீக்கும்.
* உருளையில் அதிக அளவு லைசின் என்ற புரதச் சத்து உள்ளதால், இது சருமத்தில் உள்ள தசைகள், முடி மற்றும் விரல் நகங்களை சீராக்க உதவும்.
* விட்டமின் சி சருமத்தில் தோன்றும் சுருக்கத்தை நீக்கி இளமையாக இருக்க உதவும். உருளை சாற்றில் அதிக அளவு விட்டமின் சி உள்ளதால் என்றும் இளமையாக இருக்க உதவும்.
* பொட்டாசியம் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.
* இதில் உள்ள ஹயாலுரானிக் அமிலம் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கும்.
* உருளை தோலில் ரைபோபிளேவின், அஸ்கார்பிக் அமிலம், போலிக் அமிலம் மற்றும் விட்டமின் பி இருப்பதால் கண், சருமம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு சிறந்தது.
உருளை அழகு குறிப்புகள்
* உருளை பவுடர்+1 டீஸ்பூன் ஓட்ஸ்+2 டீஸ்பூன் தயிர். இவற்றை கலந்து முகத்தில் தடவி காய்ந்தபின் வட்டவடிவத்தில் தேய்த்து கழுவலாம். வாரத்தில் இரண்டு முறை செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
* உருளை பவுடர்+2 டீஸ்பூன் குளிர்ந்த பால். இவற்றை கண்களைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறையும்.
* உருளை பவுடர்+3 டீஸ்பூன் பன்னீர். நீர்க்க கரைத்து அதில் டிஷ்யு பேப்பரை நனைத்து முகத்தினை மூடி 15 நிமிடம் கழித்து எடுத்தால், சருமம் பளிச்சென்று இருக்கும்.