0ea18717
Other News

பிரபல நடிகருடன் ரகசிய நிச்சயதார்த்தம் – நடிகை நிக்கிகல்ராணி போட்டோ

நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

டார்லிங் படத்தின் மூலம் தமிழின் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

 

 

இதேபோல் மிருகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஆதி தொடர்ந்து  ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், வல்லினம், கோச்சடையான், மரகத நாணயம், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து  யாகாவராயினும் நாகாக்க, மரகதநாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த ஜோடி ரீல் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ரியல் லைஃப்பிலும் ஜோடியாகியுள்ளனர். இவ்விரு படங்களில் ஏற்பட்ட பழக்கம் இருவருமிடையே காதலாக மாறியது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆதியின் அப்பா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கல்ராணி கலந்துகொண்டார். அப்போதே அவர்கள் இருவரும் காதலில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இருவருமே அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில்  ஆதி – நிக்கி கல்ராணி இடையேயான நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.   இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

திருமணத்திற்கு ரெடியான வனிதா விஜயகுமார்

nathan

லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய்-நீங்கள் ஆணையிட்டால் நான் தயார்..!!

nathan

வடமாநில தொழிலாளி போலீசில் தஞ்சம்-ரூ.1 கோடி பரிசு விழுந்த லாட்டரியுடன்

nathan

காதல் திருமணம் செய்த தம்பியை அவரது மனைவியுடன் சேர்த்து கொலை

nathan

MODERN-ஆக மாறிய நாட்டுப்புற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

nathan

விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

உலகின் மிகப்பெரிய வெள்ளரிகளை விளைவித்து பிரித்தானியர் சாதனை!

nathan

53 வயதில் மிரட்டும் நடிகை அனு ஹாசன்..! தீயாய் பரவும் வீடியோ..!

nathan

கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்ட ஜோவிகா…

nathan