27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 623d6b201c40d
Other News

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை -நேட்டோ இனி வேடிக்கை பார்க்காது

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் நேட்டோ நாடுகள் வேடிக்கை பார்க்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் ஜோ பைடன் குறிப்பிடவில்லை என்றே தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவில் தமது நட்பு நாடுகளின் தலைவர்களுடன் கலந்தாலோசனையில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவை காட்டமாக விமர்சித்துள்ளார்.

ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போலந்துக்கு செல்லவும் முடிவு செய்துள்ளார்.

 

இந்த நிலையில், விளாடிமிர் புடின் உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், நேட்டோ நாடுகள் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமா என்ற கேள்விக்கு, தேவையான நடவடிக்கைகளை நேட்டோ முன்னெடுக்கும் என்றார் ஜனாதிபதி ஜோ பைடன்.

மட்டுமின்றி, ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமென மேற்கத்திய நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அது கண்டிப்பாக பேரழிவை ஏற்படுத்தும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதனிடையே, ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்கும் பொருட்டு தேசிய பாதுகாப்பு குழு ஒன்றை வெள்ளைமாளிகை உருவாக்கியுள்ளது.

முன்னதாக ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதலுக்கு பயந்து அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்பாது என்று ஜோ பைடன் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி சாதித்த சரவணன்!

nathan

நடத்தையில் சந்தேகம்.. சினேகாவிடம் சிக்கிக்கொண்ட பிரசன்னா

nathan

ராகு கேது பெயர்ச்சி..பலன்களை பெறப்போகும் ராசி

nathan

50 வயசில்.. 20 வயசு பெண் போல் -ஐஸ்வர்யா ராய்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

nathan

ஓரின சேர்க்கையாளர்களுக்குள் வன்முறை: 2 ஆண்கள் கூட்டு பலாத்காரம்

nathan

தமன்னா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா… குழந்தையில் செம்ம க்யூட் யார்?

nathan

தீபாவளியை கொண்டாடிய விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா?

nathan

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் ஜோடி

nathan

சூப்பர் சிங்கர் பிரகதி ஆடையில்லாமல் போட்டோஷூட்!!

nathan