29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

பாட்டியை திருமணம் செய்த 37 வயது நபர்…

nathan

4 பிள்ளைகள்… ஒரே பிறந்தநாள்…

nathan

என்னை ஏமாற்றி நாஞ்சில் விஜயன் கல்யாணம் பண்ணிட்டாரு

nathan

அமெரிக்காவில் 3 வயது மகனை கொல்ல ஆள்தேடிய தாய்!

nathan

பாக்யராஜ் முதல் மனைவி யார் தெரியுமா?

nathan

வரலட்சுமியின் திருமணத்திற்காக பிரபலங்களுக்கு நேரில் பத்திரிக்கை

nathan

சீரியல் நடிகை கம்பம் மீனா வீட்டில் துயரம்: உருக்கமான பதிவு

nathan

நட்சத்திரபெயர்ச்சி அடையும் சனியால் துரதிஷ்டம் பெறும் ராசிகள்

nathan

மாயா அவருடன் உறவில் இருந்தார்…எனக்கு தெரியும்…

nathan