அறுசுவைகேக் செய்முறை

ஸ்பாஞ்ச் கேக்

தேவையான பொருட்கள்IMG_5948e

  • பொடித்த சீனி- 250 கிராம்
  • வெண்ணெய்- 250 கிராம்
  • முட்டை-4
  • மைதா மாவு- 250 கிராம்
  • பேக்கிங் பவுடர்- 2 டீஸ்பூன்
  • ஆரஞ்சு எஸென்ஸ் அல்லது ரோஸ் எஸென்ஸ்- 2 ஸ்பூன்

செய்முறை

  • வெண்ணெயை குளிர்சாதப்பெட்டியிலிருந்து எடுத்து room temperatureல் வைக்கவும். அது மிருதுவான பதத்துக்கு வரும்போதுதான் கேக் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
  • சீனியை நன்கு மாவாகப் பொடித்துக் கொள்ள வேண்டும்.
  • மாவையும் பேக்கிங் பவுடரையும் கலந்து மூன்று முறை சலிக்கவும்.
  • முட்டைகளை தனியாகப் பிரித்தெடுக்கவும். முதலில் முட்டை வெள்ளைகளை சிறிதுகூட மஞ்சள் கரு கலப்பில்லாது எடுத்து வைக்கவும்.

  • பிறகு அவற்றை egg beater அல்லது electronic beaterல் நன்கு அடிக்கவும். அடிக்க அடிக்க முட்டை வெள்ளை கட்டித் தயிர்போல திரண்டு வரும். இறுதியில் கட்டியான பாளம்போல தயிர் பதத்தில் வந்ததும் அடிப்பதை நிறுத்தவும்.
  • ஒரு அகன்ற க்ளாஸ் பாத்திரம் எடுத்து இளகலான வெண்ணெய், சீனியைப் போட்டு நன்கு அடிக்கவும். அல்லது electronic beaterலும் இதை மட்டும் நன்கு நுரை வர அடிக்கவும்.
  • பிறகு முட்டை வெள்ளையை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து ஒரு ஸ்பாட்டுலாவால் மிருதுவாக கலக்கவும். பின் அடித்த மஞ்சள் முட்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலக்கவும்.
  • அதன் பிறகு மாவை ஒவ்வொரு கரண்டியாக சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.
  • இறுதியில் எஸ்ஸென்ஸ் சேர்த்து கலந்து கேக் ட்ரேயில் ஊற்றி பரப்பவும்.
  • ஏற்கனவே சூடாக்கப்பட்ட அவனில் வைத்து 160 டிகிரி C-யில் சுமார் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  • பிறகு 10 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து ஆற வைத்து விரும்பிய வண்னம் துண்டுகள் செய்யவும்.

Related posts

மைதா வெனிலா கேக்

sangika

ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேக்

nathan

சிக்கன் மன்சூரியன்

nathan

சுவையான மீன் சூப் இவ்வாறு செய்து சாப்பிடுங்கள்…..

sangika

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad chicken 65 Masala ,tamil samayal kurippu

nathan

இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்

nathan

இறால் பஜ்ஜி

nathan

முட்டையில்லாத ரிச் கேக்

nathan

சுவையான இஞ்சி புளி தொக்கு!

sangika