Homemade Turmeric Face Pack4 590x362 1
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

மஞ்சள் பூசிக் குளிக்கும் வழக்கம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இருந்து வருகிறது. மஞ்சள் தோலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது. இந்த காலத்து பெண்களில் பலர் மஞ்சள் பூசிக்குளிப்பதில்லை.
ஆகையால் தான் அவர்களுக்கு மீசையும், தாடியும் வளர்கின்றன என்ற பலர் நினைக்கின்றனர். இது தவறு. மஞ்சள், முடியின் வளர்ச்சியை அடியோடு தடுப்பதில்லை.


ஓரளவுக்குத் தான் தடை செய்கிறது. இதனால் தான் மஞ்சள் பூசிக் குளிக்கும் பெண்களிலும் பலருக்கு முகத்தில் முடி வளர்ந்திருப்பதை காணலாம்.
மஞ்சள் பூசிக் கொண்டால் ஒரு சிறிது தடைபடுகிறது. பிறகு மஞ்சள் பூசுவதை விட்டு விட்டால் மீண்டும் முடி வளர தொடங்கி விடுகிறது.
பெண்களின் உடலின் பெண் சுரப்பிகள் மிகுந்த அளவுக்கு வேலை செய்யாமல் ஆண் சுரப்பிகள் மிகுதியாக இயங்கினால் பெண்களுக்கு ஆணின் தண்மையும் ஆண்களைப் போலவே உடல் முழுவதிலும் முகத்திலும் முடி வளர்கிறது.
இதை உணராமல் மஞ்சள் பூசிக் குளிக்காத பெண்களுக்கு மட்டும் முடி வளர்கிறது என்று எண்ணுவது அறியாமை! மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்களுக்கு முடி இருந்தால் அது பளிச்சென்று தெரியாது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

Related posts

குழந்தையுடன் செளந்தர்யா ரஜினிகாந்த் -புகைப்படம்

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் இரவில் படுக்கும் முன் தவறாமல் செய்ய வேண்டியவைகள்!!!

nathan

பிச்சை எடுப்பேன்னு அம்மா நினைச்சாங்க!

nathan

தயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும்

nathan

சரும அழகை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களையெல்லாம். வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அனைவரது வீட்டிலும் வளர்க்கப்படும் கற்றாழையைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

nathan

சருமத்தின் கருமையை போக்க உதவும் சில பேஸ் பேக்குகள்

nathan

ஒரு குறைபாடற்ற தோலுக்கு மஞ்சளினால் ஏற்படும் 7 நன்மைகள்

nathan

மஹத் மகனா இது ? அதுக்குள்ள எப்படி வளந்துட்டார்

nathan

மங்காத அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்! ~ பெட்டகம்

nathan